[வேற்றுமை மயங்கியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்61

61

இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். ஓம்படுத்துச் சொல்லுதற்கண் வருஞ் சொற்கண், உருபு தொகையாகி வருங்காலத்து, இரண்டாவதும், மூன்றாவதும் நீங்குதல் இல. எனவே இரண்டாவதன் பொருளும் மூன்றாவதன் பொருளும் படும், எ - று.

எ - டு. ‘அறம் போற்றி வாழ்மின்’ என்றவழி, அறத்தைப் போற்றி வாழ்மின் எனப் போற்றப்படுவது அறம் என்னும் பொருளும் பட்டது. அறத்தாற் போற்றி வாழ்மின் எனப் போற்றப்படுவார் தாம் என்னும் பொருளும் பட்டது.

(12)

கொடைப்பொருளில் நான்காவதும் ஆறாவதும் மயங்கல்

94.

1குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி
அப்பொரு ளாறற் குரித்து மாகும்.

நான்காவதோடு ஆறாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். நான்காம் உருபு தொக எதிர்காலம் பற்றிவரும் கொடைப்பொருண்மை ஆறாவது விரித்தற்கு உரித்தும் ஆகும். எ-று.

எ - டு. ‘தேவர் பலி’ என்பது ‘தேவர்க்கு நோக்கின பலி’ என விரிதலே யன்றித் தேவரது பலி எனவும் விரியும்.

(13)

அச்சப்பொருளில் ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்கல்

95.

அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும்
எச்ச மிலவே பொருள்வயி னான.

ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். அச்சம் என்னும் பொருண்மைக்கு ஐந்தாவதும் இரண்டாவதும் பொருட் பக்கத்தான் ஒழிபில, எ-று. எனவே சொற் பக்கத்தான் ஏனை வேற்றுமையும் ஒழிபில எ-று.

எ - டு. கள்ளரை அஞ்சும் என்பது செயப்படுபொருள் குறித்து நின்றது. கள்ளரின் அஞ்சும் என்பது பொரூஉப்பொருளும், ஏதுவும் குறித்து நின்றது. இனிக் கள்ளரான் அஞ்சும், கள்ளர்க் கஞ்சும், கள்ளர் மாட்டு அஞ்சும் எனவரினும், அவை ஏதுக் குறித்து நிற்றலின் பொருள் வகையான் ஏதுவாகி யடங்கின.

(14)


1. இங்கு, ஏனை உரையாசிரியர்கள், ஆறன் மருங்கின் என்னுஞ் சூத்திரத்தை வைத்து உரைசெய்துளார்கள்.