62தொல்காப்பியம்[வேற்றுமை மயங்கியல்]

62

ஆறாவதன் பொருளில் வரும் உயர்திணைத் தொகையில்
நான்கனுருபு விரிதல்

96.

அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
அதுவென் னுருபுகெடக் குகரம் வருமே.

ஆறாவது நான்காவதனோடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உயர்திணைத் தொகைப்பொருண்மேல் வரும் அது வென் வேற்றுமை அது என்னும் உருபுகெடக் கு கரம் வரும், எ - று.

எ - டு. நம்பி மகன் என்பதனைக் கிழமைப் பொருள்பட விரிப்புழி, நம்பிக்கு மகன் என விரியும், நம்பியது மகன் எனின் வழுவாம்.

(15)

வாழ்ச்சிக்கிழமையில் ஆறாவதும் ஏழாவதும் மயங்கல்

97.

ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழு மாகும் உறைநிலத் தான.

ஆறாவதனோடு ஏழாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஆறாம் வேற்றுமைக்கண் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழாவதும் ஆம்; பொருள் உறையும் நிலத்துக்கண், எ-று. எனவே உறையாப் பொருட்கண் வாராது என்றவாறாம்.

உறை பொருட்கண் வந்தது--யானையது காடு. உறையும் நிலத்துக்கண் வந்தது--காட்டது யானை. அது காட்டுள் யானை எனவும் வரும்.

(16)

வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை

98.

அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது
உருபினும் பொருளினும் மெய்தடு மாறி
இருவயி னிலையும் வேற்றுமை யெல்லாம்
திரிபிட னிலவே தெரியு மோர்க்கே.

வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற்சொல்லப்பட்டன போல்வன பிறவும் ஆகித் தொன்னெறியிற் றப்பாது, உருபானும் பொருளானும் இயல்பு தடுமாறி, இரண்டிடத்தும் நிலைபெறும் வேற்றுமைச் சொல்லெல்லாம் ஆராய்ந்து உணர்வார்க்குப் பொருள் திரியும் இடன் இல, எ-று.

என்றது--பரந்துபட்ட சொல்லெல்லாம் எடுத்து ஓதல் அரிதாகலான் ஈண்டு எடுத்து ஓதப்பட்ட நிகரன வாகி உயர்ந்தோர் வழக்கினும்,