இறுதிப் பெயரோடு தொக்கு ஒரு சொன்னீர்மைப் பட்டு நிற்பது; இஃதன்ன தன்றித் தொகாநிலைத் தொடர்ச்சிக்கண் உருபு மாத்திரம் தொக்கு நிற்கும் என்று கொள்க. எ - டு. | காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி மாதரிக்குக் காட்டி மனையி னகன்றுபோய்க் கோதி லிறைவனது கூடற்கட் கோவலன்சென் றேத முறுதல் வினை. |
இதனுள், பல உருபு பலவினையான் வந்தன; ஒருவினையான் முற்றுப் பெற்றன. உருபுதொக வருமாறு;--நிலத்தைக் கடந்தான்; வாளால் வெட்டினான்; கொலைக்கு உடம்பட்டான்; வரையினின்றும் பாய்ந்தான்; சாத்தனது பொத்தகம்; மாடத்துக்கண் இருந்தான் என்பன, நிலம் கடந்தான்; வாள் வெட்டினான்; கொலை யுடம்பட்டான்; வரைபாய்ந்தான்; சாத்தன் பொத்தகம்; மாடத்திருந்தான் என உருபு தொக்கவழியும் ஒட்டுப்படாது நின்று, தொகாநிலைத் தொடர்ச்சியாகிப் பொருள் பட்டவாறு கண்டுகொள்க. தொகைச் சொல்லும், உருபு தொகைச் சொல்லும் வேறுபாடிலவாயினு மோசை வேற்றுமையான் வேறுபாடறிந்து கொள்க. பிறிது பிறிதேற்றல் என்பதனை ஆறனுருபு ஏனையுருபேற்கும் எனப் பொருளுரைத்துச்1 சாத்தனதனை, சாத்தனதனொடு என உதாரணங்காட்டுபவாலெனின், அவ்வாறு வரும் அது என்பது உருபுநிலை யொழிந்து பொருளாய் நிற்றலானும், சாத்தனதனைக் கொணர்ந்தான் என்றவழி இடைநின்ற அது என்பது உருபாயிற் சாத்தனைக் கொணர்ந்தான் என்னும் பொருள் படல்வேண்டும்; அவ்வாறு பொருள்படாது உடைப்பொருளையே காட்டுதலானும்; அஃறிணை யொருமை அது என்னும் பெயர்த்தாதலானும், சாத்தன் பொத்தகத்தைக் கொணர்ந்தான் என்றாற்போல்வதல்லது, உருபு பெற்றதென்றல் அமையா தென்க. (20) உருபு தொகும்வழிப் படுவதோர் இலக்கணம் 102. | ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகா விறுதி யான. |
மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இரண்டாவதும் ஏழாவதும் அல்லாத பொருட்கண் வரும் உருபு தொடர்மொழி யீற்றின்கண் தொகா எ-று. ‘உய்த்துக் கொண்டுணர்தல்’ என்னும் தந்திர உத்தியான் உருபேற்ற சொல்லும் முடிக்குஞ் சொல்லும் மாறி நிற்கவும் பெறும் என்பது பெற்றாம்; என்னை? அவை இறுதியிற்றொகா என்றமையின். அவை மொழிமாறி நிற்குமாறு;- கடந்தான் நிலத்தை; வெட்டினான் வாளால்; கொடுத்தான் சாத்தற்கு; நீங்கினான் ஊரின், ஆடை சாத்தனது; இருந்தான் குன்றத்துக்கண் என்பன; இவற்றுள் உருபுதொக வந்தன;--கடந்தான் நிலம், இருந்தான் குன்றத்து என்பன என்னை? இவை உருபு
1. இளம்பூரணர் முதலியோர் உரை.
|