குடத்தை வனையான் என்றவழிச் செயப்படுபொருள் தோன்றிற்றின்றாயினும், இவ்வாறு சொல்லப்பெறும் என வழுவமைத்தவாறு. (23) உருபுகளுட் சில திரியு மெனல் 105. | கு ஐ ஆன்என வரூஉம் இறுதி அவ்வொடுஞ் சிவணுஞ் செய்யு ளுள்ளே. |
வற்றுமை யுருபினுள் சிலவற்றிற்கு உரியதோர் திரிபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். கு, ஐ, ஆன் என்று சொல்லப்பட்ட தொடர்மொழி இறுதிக்கண் வரும் உருபு, அவ்வொடும் சிவணும் செய்யுளகத்து, எ - று. உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். (24) எய்தியது விலக்கல் 106. | 1அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கில் குவ்வும் ஐயும் இல்லென மொழிப. |
எய்தியது ஒருமருங்கு விலக்குதல் நுதலிற்று. இ - ள். அஃறிணைப் பொருட்கண் குவ்வும், ஐயும் அகரத்தொடு சிவணா, எ-று. எனவே, உயர்திணைக்கண் மூன்றுருபும் சிவணும் என்பதூஉம் அஃறிணைக்கண் ஓருருபு சிவணும் என்பதூஉம் கூறியவாறாம். எ - டு.2கடிநிலை யின்றே ஆசிரி யற்க; புள்ளினான; புலவரினான என வந்தன. ஐகாரம் அகரத்தோடு சிவணுமாறு வந்தவழிக் கண்டு கொள்க. பரிபாடலகத்து-நின்னொக்கும் புகழ் நிழலவை (பக்கம் 4) நீழ னேமியன என்பன அகரத்தோடு சிவணி வந்தன எனினும் அமையும். இவை அஃறிணைப் பொருள் அன்றோ எனின்; தெய்வப் பொருண்மையான் உயர்திணையாம். (25) ஏனையுருபுகள் நான்கனுருபில் சென்று மயங்கல் 107. | இதன திதுவுற் றென்னுங் கிளவியும் அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும் அதனாற் செயப்படற் கொத்த கிளவியும் முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும் காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும் |
1. இளம்பூரணர் ‘அவற்றுள்’ என்ற தனிச்சொல்லுடன் இச்சூத்திரத்தை ஆள்வர். 2. தொல். புள்ளி. 94.
|