[வேற்றுமை மயங்கியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்71

71

அஃதேல், ஐந்தாவதாகிய நீங்க நிற்றல் காரகம் அன்றோ எனின்’ காரகம் என்பது தொழில் முதனிலையாகலிற் காரகம் அன்றென்பது போலும் கருத்து. நீங்க நிற்றல் முதனிலையாகாவாறு என்னை யெனின், ஆடையை நெய்து முடித்தான் படமரத்தினின்றும் வாங்குதல் நீக்கம் ஆகலின், அஃது அத்தொழில் முடிந்தபின் நிகழின் அல்லது தொழிற்கு உறுப்பு அன்மையால் காரணம் அன்றாயிற்று. ஆறாவது அவ்வாடையைக் கிழமை செய்வான் மாட்டே நிகழ்தலின், அதுவும் காரகம் அன்றாயிற்று. முதற்காரணம் கருவியின் அடங்கும்; நூலால் நெய்தான்.

(28)

மேலதற்கோர் புறநடை

110.

அவைதாம்,
வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும்.

மேலதற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட எண்வகைப் பொருளினும் வழங்கிய நெறிக்கண் குறைவன குறையும், எ - று. தொழில் கண்டுழி யெல்லாம் இவை எட்டும் வருதல் நியமமின்று, எ - று.

எ - டு. ஆடையை நெய்தான் றனக்கு என்றவழிக் கொள்வான் பிறன் ஒருவன் இன்மையின், அப் பொருண்மை குறைந்து நின்றது. உலகினைப் படைத்தான் என்றவழிக் கொள்வானும், பயனும் இன்றி வந்தது. கொடி ஆடிற்று என்றவழிக் கருத்தாவும், கொள்வானும் பயனும் இன்றி வந்தது. பிறவும் அன்ன.

(29)

ஆகுபெயரிலக்கணம்

111.

முதலிற் கூறும் சினையறி கிளவியும்
சினையிற் கூறும் முதலறி கிளவியும்
பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும்
இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும்
வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ
1அனைய மரபினவே ஆகுபெயர்க் கிளவி.

ஆகுபெயர்க்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்திற்று எனினும் அமையும்.

ஆகுபெயர் என்பது யாதோ எனின், யாதானும் ஒரு பொருத்தத்தினால் ஒன்றன்பெயர் ஒன்றதாகி வருவது.

இ - ள். முதலிற் கூறும் சினையறி கிளவி முதலாக எண்ணப்பட்டனவும், வினைமுதல் உரைக்குங் கிளவியொடு கூட அத்தன்மையவாகிய மரபினையுடையவும் ஆகுபெயர்ச் சொல்லாம் எ - று.


1. அனைமரபினவே’ என்பதும் பாடம். இளம்பூரணர் பாடம் இதுவே.