கிளவியாக்கம்81

என வரும். குருடு,   முடம்  என்று   காட்டுவர்   உரையாளர்,   அவை
அஃறிணைக்கும் ஏற்றலின் உயர்திணை மருங்கின் நிலை  பெறுவன அல்ல.
காதல் என்பது   காதலரை   உணர்த்துவதனை   அவன்   தன்   காதல்
துணையாகக்   கடஞ்சென்றான் எனவும், அவள் தன் காதலை எதிர்நோக்கி
ஆற்றியிருக்கிறாள் எனவும்  வழங்கும்   வழக்கான்   அறிக.  சிறப்பாவது:
தலைமை, அஃது  அவைத்தலைமை   எங்குற்றது   என்றாற்  போலவரும்,
செறற்சொல்: வெறுப்பினைப்   புலப்படுத்தும்   சொல். அது   பொறியறை,
போக்கிலி என்றாற் போலவரும்.  விறற்சொல்:  வெற்றியைக்  கருதி  வரும்
சொல், பெருவிறல் புரிந்த போர். அருந்திறல் செய்த செயல் என்றாற்போல
வரும்.
 

அன்னபிறவும் என்றதனான் வேந்து, குரிசில், ஏந்தல், ஆயம், அமைச்சு,
தூது, ஒற்று முதலாயின கொள்க.
 

இச்சூத்திரம் "உயர்திணை என்மனார் மக்கட்  சுட்டே"  என்றமையான்
இவை மக்கட் பண்பாகலின் உயர்திணை  முடிபு  கொள்ளுங்கொல்:   என
நின்றதோர் ஐயங்களைந்தது.  இவை  உயர்திணைப்  பால்  காட்டுதற்குரிய
ஈற்றிடைச் சொற்களொடு  கூடாதவழிச்   சொல்நிலையான்    அஃறிணைச்
சொல்லேயாம் என்றும்  அதனான் அஃறிணை முடிபே கொள்ளும் என்றும்
தொடர் மொழியாக்கம் பற்றிக் கூறிற்றென்க.
 

சூ. 57 :

காலம் உலகம் உயிரே உடம்பே 

பால்வரை தெய்வம் வினையே பூதம் 

ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம் 

ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன 

ஆவயின் வரூஉம் கிளவி யெல்லாம் 

பால்பிரிந் திசையா உயர்திணை மேன. 

[57]
 

க-து:

உயர்திணை   மருங்கின்   பால்    பிரிந்திசைக்கும்  எனக்கூறிய
தெய்வஞ்    சுட்டிய    பெயர்நிலைக்      கிளவிகள்   பற்றிய
ஐயமகற்றுகின்றது.   இஃது   'பெண்மை   சுட்டிய   உயர்திணை
மருங்கின்' (கிள-4) என்னும் சூத்திரத்திற்குப் புறனடையாகும். 
 

உரை : காலம் முதலாகச் சொல்   ஈறாகக்   கூறப்பெற்ற   அப்பத்துச்
சொற்களொடு அத்தன்மையனவாகிய பிறவுமாய்த் தெய்வஞ்சுட்டிய பெயராக
அவ்விடத்து வரும் சொற்கள் எல்லாம் உயர்திணை மருங்கினவாய்ப்  பால்
பிரிந்திசைக்க மாட்டா. அஃறிணையாயே முடியும்.