உம்மை எதிர்மறை. இடம் என்றது நிலையை. வேறு நிலையாவது ஈறுதிரிந்து வேறுபடுதலும் முழுதுந்திரிந்து வேறுபடுதலுமாம். |
எ-டு :குடிமையன் வந்தான். பெருந்திறலோன் வென்றான் எனவரும். இவை ஈறுதிரிந்து உயர்திணையாயிசைத்தன. நிலமகள் (உலகம்) செழித்தாள். நாமகள் (சொல்) அருளினாள் எனவரும் இவை முழுதும்திரிந்து உயர்திணையாய் இசைத்தன. |
அவற்றுள் ஈறுதிரிதற்கேலாத குழவி, தன்மைதிரிபெயர், உயிர், உடம்பு, ஞாயிறு, திங்கள் போல்வனவற்றை நீக்குதற் பொருட்டு "நின்றாங்கிசையா வேறுபட்டிசைக்கும்" என ஒருங்கு ஒரு சூத்திரமாகக் கூறாமல் பிரித்துக் கூறினார் என்க. |
சூ. 60 : | எடுத்த மொழிஇனஞ் செப்பலும் உரித்தே |
[60] |
க-து: | இனம் உள்வழிச்செப்பு நிகழ்த்தும் மரபாமாறு கூறுகின்றது. |
|
உரை :ஒரு பொருளைப்பற்றிச் செப்பாக மொழிந்த சொல் அதற்கு இனமான பொருளை ஒருங்கு உணர்த்தற்கும் உரித்தாகும். |
உம்மையான் இனம் செப்பாமைக்கும் உரித்தாகும் என்க. இனப்பொருட்கருத்து உள்ள இடத்தன்றி இப்பொருட்பேறு நிகழாதாதலின் பிறபொருள் என்னாது, இனம் செப்பலும் என்றார். |
எ-டு : ஈகை புகழைத்தரும், கல்வி அறிவைப் பெருக்கும், அளவறிந்துண்பான் இன்புறும் என்றவழிக் கூறுவோனுக்கு இனக்கருத்தை உணர்த்துதலும் கருத்தாயின், ஈயாமை இகழைத்தரும், கல்லாமை அறிவைச் சுருக்கும், கழிபேரிரையான் துன்புறும் என்னும் பொருள் உடன்தோன்றி நிற்கும். |
அரசு வாழ்க, அந்தணர் வாழ்க, தமிழ்வளர்க என்ற வழி அரசல்லார் வீழ்க அந்தணரல்லார் வீழ்க தமிழ் அல்லவை சுருங்க என்னும் கருத்துத் தோன்றாவாகலின் இவைபோல்வன இனஞ் செப்பாவாம். |
இனித் தென்சேரிக் கோழி வென்றது என்புழி வடசேரிக்கோழி தோற்றது எனவருதல் இனஞ் செப்புதலாகாது. என்னை? ஒன்று தோற்றாலன்றி ஒன்றற்கு வெற்றிகிட்டாது ஆகலின் இவை போல்வன பொருளாற்றலாற் பெறப்படுவனவாம். ஆவாழ்க அந்தணர் வாழ்க என்போன் பிறவும் பிறரும் வீழ்க என்னும் |