நிலைகளைப்பற்றி இவ்வியலுட் கூறுகின்றார். வேற்றுமையாவது யாதானும் ஒரு நிலையை இயல்பாகக் கொண்டு அந்நிலையினின்று திரிபுறுதலாகும். ஒரு தொடரின்கண் அமைந்துள்ள சொற்பொருள்வேறுபடாத நிலை இதுவென்றும், அதுவேறுபடும் முறைமை இதுவென்றும், வேறுபடுத்துவது இதுவென்றும் விளக்குதலின் இவ்வியல் வேற்றுமையியல் எனப்பட்டது. |
ஐ முதலிய ஆறு உருபுகளை ஏற்று வேற்றுமையடைவது பெயர் (பொருள்) ஆதலின் வேற்றுமை இலக்கணத்தைப் பெயர் இலக்கணத்தொடு கூறாமல் பிரித்துக் கூறியது என்னை எனின்? வேறுபடுவது பெயர் (பொருள்) ஆயினும், அவ்வேறுபாட்டினைச் செய்வது வினைச்சொல்லாகலானும், அவ்வேறுபாட்டினைப் புலப்படுத்துவது உருபாகிய இடைச்சொல்லாகலானும், பெயர், வினை, இடை என்னும் மூன்றற்கும் உரிமையுடையதனை ஒன்றனுள் அடக்குதல் நெறியாகாமையான் பிரித்துக்கூறப்பட்டது. அன்றியும் |