90வேற்றுமையியல்

இருதிணைப் பெயர்களுள் விளி ஏலாதனவும் உளவாகலின்  கொள்ளும்
பெயரொடு தெளியத் தோன்றுவது    இதன்   இலக்கணமாதலின்   "விளி
கொள்வதன்கண் விளி" என்றார், கொள்வது என்பது   வினையாலணையும்
பெயர், 'விளி' என்றது இயல்பும் ஈறு திரிபுமாக வரும் அதன் இயல்பினை.
 

விளி, சிலபெயர்களொடு வாராது என்பதன்றி அது வேற்றுமை   எய்தும்
தன்மையிற் குறைபாடுடைய தன்றாகலின் ஏனையவற்றோடு ஒக்கும்  என்பது
தோன்ற "எட்டே" எனத்   தேற்றேகாரம்   கொடுத்தோதினார்.   எல்லாப்
பெயர்களொடும் வந்து வேற்றுமை  செய்யும்   எழுவாய்  முதலியவற்றொடு
ஒருங்கு கூறாமல் அதன்   சிறப்பின்மை    தோன்றப்    பிரித்துக்கூறினர்
ஆசிரியர்.
 

உரையாளர் முன் சூத்திரத்தைப் பிறர்மதங் கூறியதென்றும் இச்சூத்திரம்
தன்துணிபு உரைத்தது என்றும் கூறுவர்.   பிறர்மதங்  கூற  ஈண்டு யாதும்
இயைபின்மையின் அது பொருந்தாது என்க.
 

மற்று ; யான், யாம்-நீ, நீயீர்    போல்வனவாகிய    சில    பெயர்கள்
வேற்றுமைகளை எய்தாமையின்  விளிவேற்றுமையை   மட்டும்   இவ்வாறு
பிரித்துக் கூறியது, பொருந்துமோ?  எனின்   யான்,   யாம்,   முதலியவை
என், எம்   முதலியவையாகத்    திரிந்து    வேற்றுமைகளை    எய்தும்.
விளிவேற்றுமை கொள்ளாத பெயர்கள் எவ்வாற்றானும் விளி எய்தாமையின்
பொருந்துமென்க.     "விளி      கொள்வதன்    விளி"    என்பதற்குப்
"பிறிதோரிடைச்சொல்லை ஏலாது தானே திரிந்தும்   இயல்பாயும்   நிற்கும்
பெயரிறுதி என்பது பெற்றாம்" என்பார் நச்சினார்க்கினியர். "ஓவும் உவ்வும்
ஏயொடு சிவணும்" (விளி-5)  "தொழிற்பெயராயின்   ஏகாரம்   வருதலும்"
(விளி-22) எனவரும் ஆசிரியர்    கூற்றான்    அஃது    ஒவ்வாமையறிக.
அழைக்கப்படுதல்     விளியின்    வேறுபடு    பொருள்     நிலையாம்.
முன்னிலையாதல் அதன் வேறுபடு செயல்நிலையாகும்
 

சூ. 64 :

அவைதாம், 

பெயர்ஐ ஒடுகு 

இன்அது கண்விளி என்னும் ஈற்ற  

[3]
 
க-து :

வேற்றுமைகளின் குறியீடும், நிரல்முறையும் கூறுகின்றது. 

 

உரை :மேல் எட்டே  எனக் கூறப்பட்ட  வேற்றுமைகள் தாம்   பெயர்,
ஐ, ஓடு, கு, இன், அது, கண், விளியென்னும் ஈற்றனவாம்.