வேற்றுமை மயங்கியல்151

4. முறைக்கொண்டழுந்த     பெயர்ச்      சொற்கிளவி    என்பது :-
பிறப்புத்    தொடர்பான   கிழமை    கொண்டு  நிற்கும் ஆறாவதற்குரிய
முறைப்    பொருட்கண்,  நான்கனுருபு         இம்மகளுக்குத்தாய்  இது;
இக்குருளைக்குத் தந்தை இது   எனவரும். "உயர்திணைத்   தொகைவயின்
அதுவென்   உருபுகெடக்  குகரம் வரும்" என்றதனான்  இஃது அஃறிணை முறைப் பெயர் என்பது போதரும்.
 

5. பால்வரை   கிளவி  என்பது :-  இடத்தை  வரைந்துணர்த்தி வரும்
ஐந்தாவதற்குரிய எல்லைப்  பொருட்கண்    நான்கனுருபு,    கருவூர்க்குக்
கிழக்கு மருவூர் எனவரும்.
 

6. பண்பின்   ஆக்கம்   என்பது :- பண்பு   பற்றி வரும் ஒன்றனொடு
ஒன்றை   உறழ்ந்து   கூறும் ஐந்தாவதற்குரிய  பொருட்கண்,  நான்கனுருபு
சாத்தற்கு நெடியனாயினான்-அரசற்கு மேலாயினான் எனவரும்.
 

7. காலத்தின்     அறியும்     வேற்றுமைக்      கிளவி   என்பது :-
காலத்தின்கண்  வேறுபாடு அறியவரும்   ஏழாவதன்   காலப்பொருட்கண்,
நான்கனுருபு நேற்றைக்கு  வந்தான். நாளைக்கு வரும்-என உலக வழக்காக
வரும்
 

8. பற்று    விடுகிளவி      என்பது  :-     பற்றுவிடுதல்   என்னும்
ஐந்தாவதற்குரிய      பொருட்கண்    நான்கனுருபு,  மனைவாழ்க்கைக்குப்
பற்றுவிட்டான் எனவரும்.
 

9. தீர்ந்து    மொழிக்கிளவி    என்பது :-  தீர்தல் பொருளுணர்த்தும்
ஐந்தாவதற்குரிய      நீக்கப்    பொருட்கண்   நான்கனுருபு,   ஊர்க்குத்
தீர்ந்தான் - ஊர்க்கு நீங்கினான் எனவரும்.
 

அன்னபிறவும்  என்றதனான் ஏழாவதன் இடப்பொருட்கண் நான்கனுருபு - ஊர்க்குச்   சென்றான்   எனவும்,    ஐந்தாவதன் எல்லைப்பொருட்கண்
ஊர்க்குச் சேயன் எனவும் தொன்னெறி மரபினவாய் வருவன கொள்க.
 

சூ. 111 :

ஏனை உருபும் அன்ன மரபின 

மான மிலவே சொன்முறை யான  

(28)
 

க-து :

ஏனைய உருபுகளும் பிறபொருட்கண் வருமென்கின்றது.
 

உரை :மேற்கூறிய     நான்கனுருபல்லாத    ஏனைய    உருபுகளும் தொகையின்றி   விரிந்து   நிற்கும்    தொடர்   மொழிக்கண்  மேற்கூறிய மரபினவாகச் சொல்லும் முறைமைக்கண் குற்றமிலவாம்.