உரை: வினையே = புடைபெயர்ச்சியை உணர்த்தும் உண், தின், செல், வா, போ முதலிய வினையடிகளாகிய வினையும். செய்வது = தொழிலை நிகழ்த்தும் வினை முதலும், செயப்படு பொருள் = வினை முதலின் தொழில் சென்றுபடும் பொருளும். நிலனே = அத்தொழில் நிகழ்தற்கு ஆதாரமாகிய இடனும். காலம் = அத்தொழில் நிகழ் காலமும், கருவியும் = தொழிலை நிகழ்த்தும் வினை முதற்குத் துணையாக நிற்கும் கருவியும் ஆகிய ஆறும், அத்தொழில் நிகழ்த்துதற்குரிய நோக்கமாகிய இன்னதற்கு எனவும் அத்தொழிலின் விளைவாகிய இது பயனாக எனவும் சொல்லப்பெறும் இம்மரபினையுடையவாகிய இரண்டொடும் கூடி, அமையும் அவ் எட்டும் முற்றி நிற்கும் தொழிற்கு அடிப்படைக் காரணங்கள் என்று கூறுவர் ஆசிரியர். |