154வேற்றுமை மயங்கியல்

அவ்வாறே (குழையை)  உடையான்  என்புழி உடைமை உணர்ச்சியாகிய
உளத்துநிகழ்   வினையும், உடையானாகிய   வினை  முதலும் குழையாகிய
செயப்படுபொருளும்  செவி உறுப்பாகிய இடமும் நேற்றுஉடையான்  இன்று
உடையான்   நாளை உடையனாவான்   என்னும்  காலக்குறிப்பும் செல்வச்
செருக்கினைப்     புலப்படுத்தும்    நோக்காகிய    கருவியும் செவிக்குப்
பூட்டினான்   என்னும்     இன்னதற்கு     என்பதும்  பிறர்   மதிப்பைக்
கோடலாகிய இது பயனாக என்பதும் தோன்றியவாறு காண்க.
 

இச்    சூத்திரத்திற்கு     உரையாசிரியன்மார்   கூறியுள்ள  உரையும்
விளக்கமும்   நூற்கருத்தைத் தெளிவுறுத்தாமையை விளக்கப்புகின் விரியும்.
மேலும் இதனை   வினைச்சொற்கு   இலக்கணம் கூறியுள்ளதாகவும், இஃது
இடம்மாறி நிற்பதாகவும், வடநூலார் கூறும்  காரகங்களை விளக்கியதாகவும்
கூறினாருமுளர்.    இச்சூத்திரத்தொடு    இயைபில்லாக்   கருத்துக்களைக்
கூறிக்குழப்பினாரும் உளர். அவையெல்லாம் நூற்கருத்தாகாமையை ஈண்டுக்
கூறிய     உரையானும்   முன்னும்   பின்னும் ஆசிரியர் கூறியவற்றானும்
ஓர்ந்தறிந்து கொள்க.
 

சூ. 113 :

அவைதாம் 

வழங்கியல் மருங்கிற் குன்றுவ குன்றும்  

(30)
 

க-து :

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
 

உரை :மேற்கூறப்பட்ட   தொழில்   முதனிலை   எட்டனுள் தொழிற்
சொற்கள்    வழங்கிவருமிடத்துக்     குன்றத்தகுவன    குன்றி   நிற்கும்.
'அவற்றுள்' என்னும் பாடம் காலத்தாற் பிறழ்ந்ததெனல் வேண்டும்.
 

எ-டு :கொடி   ஆடிற்று,  என்புழிப் புறநிலைச் செயப்படு பொருளும்,
இன்னதற்கு   என்பதும்  குன்றி  நின்றன. நடந்தான்  என்புழிப் புறநிலைச்
செயப்படுபொருள் குன்றிநின்றது. பிறவும் ஓர்ந்துகொள்க.
 

ஆகுபெயர்
 

இனி   எழுவாய்   வேற்றுமை மயக்கத்தினை ஆகுபெயர் எனக்குறித்து
ஆசிரியர் கூறுதலான் அதுபற்றியதொரு சிறுகுறிப்பு :
 

பெயர்ச்    சொற்கள்    யாவும்  இருதிணை  ஐம்பாற் பொருள்களைக்
குறித்துணர்த்தும்    குறியீடுகளே.   அக்குறியீட்டுச்  சொற்களின் பொருட்
காரணம் சிலவற்றுள் தெற்றெனத் தோன்றா