வாயினும், எல்லாச் சொல்லும் காரணம் பற்றியனவே என்பது நூலோர் துணிபு. சொல் பொருளுணர்த்துங்கால் தனக்குரிய செம்பொருளை வெளிப்பட உணர்த்தலும், யாதானும், ஓர் இயைபு பற்றித் தொடர்புடைய பிற பொருளைக் குறிப்பான் உணர்த்தலும் அதன் இலக்கணமாம். (பெயரியல் - 3.) இவை முறையே வெளிப்படை என்றும் குறிப்பு என்றும் வழங்கப் பெறும். பொருளை உணர்தலும் இவ்வாறேயாம். யானை நேரே வருதலைப் பார்த்துணர்தல் வெளிப்படை உணர்வு, அதன் மணியோசை முதலிய ஏதுவான் உணர்தல் குறிப்பானுணர்தல். |
பல சொற்கள் ஒரு பொருளைத்தருதற்கும் ஒரு சொல் பல பொருளைத் தருதற்கும் காரணம் அச்சொற்களின்கண் அமைந்துள்ள தன்மைகளேயாம். அஃதாவது அனல் - கனல் - தணல், தீ முதலிய பல சொற்கள் உள. இவற்றின் பொருளை நோக்கின். அனல் (அல் + நல் = அனல்) இருளின்கண் நலம் பயப்பது கனல் (கன் + அல் = கனல்) இனிமை அல்லாதது (கன் - இனிமை) தணல் (தண் + அல்) குளிர்ச்சி அல்லாதது அழல் அழிதல் (அழியச் (வேகச்) செய்தல்) தீ - தேய்த்து அழித்தல் என்பனவாம். (உரிச்சொல் மொழியாதற்கண் எய்தும் புணர்ச்சிக்கண் இரு மொழிப்புணர்ச்சிக்குரிய விதிகள் அமையா என்பதுபற்றி உரியியலுள் கண்டு கொள்க.) |
இச் சொற்களின் காரணங்கள் வேறுபடினும் யாவும் நெருப்பிற்குரிய தன்மைகளாய் ஒன்றுபடுதலின் ஒரு பொருளுணர்த்தின. அவ்வாறே 'கிள்ளை' என்னும் சொல் கிளி - குதிரை முதலியவற்றை உணர்த்திற்று. என்னை? இதன் அடிப்படை உரிச்சொல் 'கிள்' என்பதாம். கிள் என்பதற்குக் கிளைத்தல், கிள்ளுதல், கிளத்தல் முதலியவை பொருளாம். கிளி சொல்லை விட்டுவிட்டு வெளிப்படுத்தலும் குதிரை விட்டுவிட்டுத்தாவிச் செல்லுதலும் ஒற்றுமைத்தன்மையாம். இங்ஙனம் யாதேனும் ஒருதன்மை ஒத்தலான் ஒரு வேர்ச்சொல்லினின்று பல சொற்கள் கிளைப்பனவாயின. |
இனி, எழுவாய் என்னும் முதல் வேற்றுமை இலக்கணம், "பெயர்தோன்றும் நிலையே" என்பதாம். அஃதாவது இருதிணை ஐம்பாற் சொற்களுள் செப்பலும் வினவலும் கருதி ஒன்றைப் பிரித்து வாங்கிய நிலையில் அச்சொல் எழுவாய் வேற்றுமையாகின்றது. |
சொல்லினது இலக்கணமாக மேற்கூறப்பட்ட வெளிப்படை, குறிப்பு என்னும் இரண்டிலக்கணமும் இங்ஙனம் எழுவாயாக வரும் |