அனைமரபின என்றது அஃது ஆகிவரும் பொருட் கூறுபாடுகள் இவ்விலக்கணத்தன என்றவாறாம். ஒப்பின் முடித்தல் என்னும் உத்தியான் பிறந்தவழிக்கூறல் என்பதனொடு பிறந்தவழி நிகழ்வனவும் கொள்க. தன்னின முடித்தல் என்னும் உத்தியான் இயன்றதுமொழிதல் என்பதனொடு இயல்வது மொழிதலும் கொள்க. அஃதாவது காரணமாகிய பொருளை, அதனான் இயலும் காரியத்தாற் கூறுதலாம். அளவை ஆகுபெயர் பற்றிப் பின்னர் விதந்து கூறுதலான் பண்பென்பதற்கு அளவுப்பெயர் தவிர்த்த ஏனையவற்றைக் கொள்க. |
எ-டு:1) கடுத்தின்றான் - தெங்குதின்றான் என்பவை முதற்பொருள் தத்தம் சினைப் பொருளுணர்த்தி நின்றன. |
2) இலை நட்டு வளர்த்தான் - பூ நட்டு வாழும் என்பவை சினைப் பொருள் தத்தம் முதற் பொருளாகிய கொடியை உணர்த்தின. |
3) குழிப்பாடி உடுத்தினான் - உறையூர் அணிந்தான் என்பவை அவ்வவ் ஊரின்கண் நெய்து வந்த ஆடையை உணர்த்தின. இது பிறந்த வழிக்கூறல். ஆறுபெருகிற்று - குளம் நிறைந்தது என்பவை இடத்துநிகழ் பொருளாகிய நீரை உணர்த்தின. |
4) காரறுத்தான் - நீலம் சூடினான் என்னும் பண்புப்பெயர் கார்முகில் பெய்யும் நீரால் விளைந்த நெல்லையும் நீலநிறத்தையுடைய மலரையும் உணர்த்தின. கார் என்பதனைக் கால ஆகுபெயர் என்ப. கார் முகிலுக்காய்ப் பின்பு அது பெய்யும் காலத்திற்காய்ப் பின்னர் நெல்லுக்கு ஆயினமையின் இருமடி ஆகுபெயர் எனவும் கூறுவர். இனிப்பு உண்டான், துவர்ப்புண்டான் என்பவை அச்சுவையமைந்த பண்டங்களை உணர்த்தின. கூன் வந்தான் என்புழிக் கடன் என்னும் வடிவம் அவ்வடிவினானை உணர்த்திற்று. இது பண்புகொள் பெயர், |
5) பொன் அணிந்தான், மணியணிந்தான் என்பவை அவற்றாலாகிய அணிகலன்களை உணர்த்தின. இது இயன்றது மொழிதல். கீறல் ஆறியது - வெட்டு ஆறவில்லை என்பவை அவற்றாலாகிய புண்களை உணர்த்தின. யாழ்கேட்டான், குழல் கேட்டான் என்பனவும்அது. யாழிடத்துப் பிறந்த ஓசையெனக் கொள்ளின் பிறந்த வழிக்கூறலாய் அடங்கும். நெல்லைப் பெற்றவனைச் சோறு பெற்றான் என்பதும், கல்வியைப் பெற்றவனை வாழ்வு பெற்றான் என்பதும் இயல்வது மொழிதலாம். இயன்றது |