பிறிதாகிய பொருளைச் சுட்டி வருதலும் ஆகிய அவ் இரு தன்மையினவாகும். ஒப்பாவது, தற்கிழமைத் தொடர்பு, அஃதில் வழி எனவே பிறிதின் கிழமையவாய் வரும் என்றவாறு. |
வரலாறு : கடுத்தின்றான். தெங்குதின்றான், இலை நட்டான், பொன்னணிந்தான் என்றாற் போல்வன தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணிவந்தன. குழிப்பாடி உடுத்தான், வாள்வெட்டு, யாழ்கேட்டான், திருவள்ளுவரைப் பயின்றான் என்றாற்போல்வன ஒப்பில் வழியாற் பிறிது பொருள் கூட்டி வந்தன. இவற்றை முறையே விடாத ஆகுபெயர் என்றும் - விட்ட ஆகுபெயரென்றும் கூறுப. |
சூ. 116 : | வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் |
(33) |
க-து : | ஆகுபெயர்க்கண் வேற்றுமைகளைப் போற்றி உணர்க என்கிறது. |
|
உரை :மேற்கூறிய இருவகையானும் வரும் ஆகுபெயர்கள் செயப்படுபொருள் முதலாய வேற்றுமைகளின் தொடர்பினான் வருமாதலின் இவ்விவ் வேற்றுமைப் பொருளான் இப்பெயர் ஆகுபெயராயிற்று எனப் போற்றிக் கொள்க. |
ஆகுபெயர்களின் வேற்றுமைத் தொடர்புகள் உணரப்பெறாவிடின் அவை தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணி வந்தனவா, ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டி வந்தனவா என்பது புலப்படா, ஆகலின் 'போற்றல்' வேண்டும் என்றார். |
போற்றி உணருங்கால் இரண்டாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணிவரும். ஏழாம்வேற்றுமை ஒப்பில் வழியாற்பிறிது பொருள் சுட்டி வரும். மூன்றாம்வேற்றுமை இரு நிலைமைத்தாயும் வரும் என அறிக. |
வரலாறு : மஞ்சள் உடுத்தாள் என்பது மஞ்சளைத் தோய்த்த ஆடையை உடுத்தாள் என இரண்டாம் வேற்றுமை பற்றி வந்த ஆகுபெயர். கடுத்தின்றான் என்பது கடுவினது காயைத்தின்றான் என ஆறாம்வேற்றுமை பற்றி வந்த ஆகுபெயர். இவைதம் பொருள்வயின் தம்மொடு சிவணி வந்தன. குழிப்பாடி உடுத்தான் என்பது, குழிப்பாடி என்னுமிடத்தில் நெய்துவந்த ஆடையை உணர்த்தலின் ஏழாம் வேற்றுமை பற்றி வந்த ஆகுபெயர். இஃது ஒப்பில்வழியாற் பிறிது பொருள் சுட்டி வந்தது. பொன் அணிந்தான் என்பது பொன்னாலாகிய அணிகலனை அணிந்தான் என மூன்றாம் வேற்றுமைபற்றித் தம்மொடு சிவணி வந்த ஆகுபெயர். இஃதொருவாள்வெட்டு என்பது வாளான் |