வெட்டப்பெற்ற புண் என ஒப்பில் வழியாற் பிறிது பொருள்சுட்டி வந்த ஆகுபெயர். நான்காம் வேற்றுமை பற்றியும் ஐந்தாம் வேற்றுமை பற்றியும் வேறுபாடுறுதல் அரிதாகும். |
தண்டூண் கிடந்தது என நாலாவதற்கு வலிந்து உரிமை செய்து காட்டுவார் நச்சினார்க்கினியர். அவர் ஐந்தாவதற்கெனக் காட்டும் பாவை வந்தாள் என்பது இரண்டாவதற்கேற்பதல்லது ஐந்தாவதாகாமை வேற்றுமையியலுட் கூறிய விளக்கத்தான் அறிக. (தண்டூண் -- வாழைத்தண்டாகிய உணவு) |
சூ. 117 : | அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி |
| உளவென மொழிப உணர்ந்திசி னோரே |
(34) |
க-து : | அளவுப் பெயரும் நிறைப் பெயரும் ஆகுபெயராய் வருமென்கின்றது |
|
உரை :அளவுப்பெயரும் நிறைப்பெயரும் அனைமரபினவாய இலக்கணத்தொடு பொருந்தக் கொள்ளுமிடத்து அவை மேற்கூறிய ஆகுபெயராதற்கு உள என்று கூறுவர் இலக்கண மரபுணர்ந்தோர். நீட்டலளவையும் எண்ணலளவையும் அளவை என்பதனுள் அடங்கும். |
அளவைப் பெயர்கள் காட்சிப்பொருளொடு படுத்துணரப்படும் கருத்துப் பொருளாகலின் நாழி - உழக்கு. கழஞ்சு, தொடி, தடி, மா, ஒன்று, இரண்டு என்னும் பெயர்கள் அவ்அளவைகளைத் தரும் மரக்கால், நிறைகல், அளவுகோல், பொருள் முதலிய கருவிகளையும், அக்கருவிகளான் அளக்கப்பெற்ற பொருள்களையும் ஆகுபெயரான் உணர்த்தலின் மேலனவற்றொடு ஒருங்கு கூறாமல் பிரித்துக் கூறினார். |
வரலாறு : இஃதொரு நாழி என்பது அளவு கருவியையும் அளக்கப் பெற்ற பொருளையும் இடம் நோக்கி உணர்த்தும். இவ்வாறே நிறைப் பெயரும்- நீட்டலளவைப் பெயரும் உணர்த்தும் எண்ணலளவை, பொருள் பற்றியே உணர்த்தும் அது கருவியன்மையன். இஃதொரு கழஞ்சு -- கருவி -- பொருள். இஃதொரு மா -- நிலம். இஃதொரு கோல் -- கருவி -- பொருள். இஃது ஒருநாழி -- கருவி -- பொருள். இஃது ஒன்று, இது பத்து -- பொருள் எனவரும். |
அளவுப்பெயர்கள் கருவியையும் உடைமைகளையும், இடத்தையும் பற்றிப் பொருள் கோடற்கியை வருதலின் -- அளவு கருவிகளை உணர்த்தும்வழித் தத்தம் பொருள்வயின் தம்மொடு |