சிவணலாயும், அளக்கப் பெற்ற பொருள்களை உணர்த்தும் வழி ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலாயும் கருதிக் கோடலின் பொதுப்பட "அவற்றொடு கொள்வழி" என்றும், இவை திரிபின்றி ஆகுபெயராயே கொள்ளினும் ஆம் என்பார் "உள" என்றும் கூறினார். |
சூ. 118 : | கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் |
| கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே |
(35) |
க-து : | ஆகுபெயர்பற்றிப் புறனடை கூறுகின்றது. |
|
உரை : மேற்கிளந்து கூறப்பெற்ற மரபினவாய் வரும் ஆகுபெயர்களேயன்றி வேறுபிறவற்றுள் தோன்றிவரினும் மேற்கூறப்பெற்ற இலக்கணத்தான் உணர்ந்துகொள்க. |
வராலாறு : பாவை போல்வாளைப் பாவை என்றும், நரியின் பண்புடையானை நரி என்றும் எழுத்தாலாகிய நூலை அறிவித்தவனை எழுத்தறிவித்தவன் என்றும், சொல்லிலக்கணம் உணர்ந்தானைச் சொல்லுணர்ந்தான் என்றும் வருவன கொள்க. இனிப் பேச்சு வழக்கின்கண் சிறப்பாகப்பயின்றறிந்தமை நோக்கிச் 'சிலம்பு' வந்தான் என்றும், 'சிந்தாமணி' வந்தான் என்றும், இடையறாது கொண்டியல்வது பற்றிப் பட்டுருமாலை வந்தான், குடை வந்தான் என்றும் வருவனவும் வழக்கு நோக்கிக் கொள்க. வரிவடிவங்களையும் அடையாளங்களையும் அவ்வப்பொருளாகக் கூறுங்கால் அவை ஆகுபெயராதலையும் ஓர்ந்துணர்ந்து கொள்க. |
வேற்றுமை மயங்கியல் முற்றியது. |
4. விளி மரபு |
எட்டாவதாக நிறுத்தப்பெற்ற விளிவேற்றுமையது மரபுகளை உணர்த்தலின் இவ்வியல் விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று. ஏனைய வேற்றுமைகளைப் போலத் தனியே உருபு என்பதொன்றின்றிப் பெயரகத்து ஈறாகி வருதலானும், அங்ஙனம் வருங்கால் ஒன்றே திரிபாயும் இயல்பாயும் நிற்றலானும் "இயல்" என்னாது மரபு என்றார். |
விளித்தலாவது அழைத்தல். அஃதாவது படர்க்கைப் பொருளை எதிர்முகப்படுத்து முன்னிலைப் பொருளாக வேறு |