படுத்தல். எனவே இதன் வேற்றுமைத்தன்மை படர்க்கையை முன்னிலையாக்குதல் என்பது அச்சொல்லானே அதன் இலக்கணம் பெறப்படுதலின் அதன் மரபுகளையே இவ்வியலுள் விரித்தோதுகின்றார். |
சூ.119: | விளி எனப்படுவ கொள்ளும் பெயரொடு |
| தெளியத் தோன்றும் இயற்கைய என்ப |
[1] |
க-து: | சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல் என்னும் உத்தியான் விளிவேற்றுமையின் இலக்கணம் எதிர்முகமாக்குதல் என்பது பெறப்பட்டமையின், இச்சூத்திரம் அஃது ஏனைய வேற்றுமைகளைப் போல எல்லாப் பெயர்களொடும் வாராது ஒருசார் பெயர்களொடு மட்டுமே வருமென அதனது சிறப்பியல்பு கூறுகின்றது. |
|
உரை: விளி எனச் சிறப்பித்துக் கூறப்பெறுபவைதாம் தம்மை ஏற்கும் பெயரொடு விளங்கத்தோன்றும் இயல்பின என்று கூறுவர் நூலோர். |
விளியேற்ற பெயர் இயல்பாதலும், ஈறுதிரிதலும், குன்றலும், பிறிது ஏற்றலுமாக அமைந்து வேற்றுமை செய்தலின் அத்திரிபுகளே உருபின் பயத்தவாம் என்பதறிவித்தற்கு 'விளி எனப்படுவ' எனப்பன்மையாற் கூறினார். "கொள்ளும் பெயரொடு" என்றதனாற் கொள்ளாப் பெயரும் உளவென்பது பொருட்பேற்றாற் கொள்ளப்படும். அண்மை விளிக்கண் விளியேற்ற பெயர் திரிபின்றி நிற்குமாயினும் ஆண்டு அஃது வேற்றுமையுற்றமையை முடிக்குஞ் சொல் புலப்படுத்தி விடுமாகலின் 'தெளியத்தோன்றும்' என்றார். |
எ-டு :அன்பன் வருக ! அன்ப வருக ! அன்பா வருக ! அன்பனே வருக ! அன்பினாய் வருக ! அன்பினோய் வருக ! அன்பாவோ வருக ! என இயல்பாயும் திரிந்தும் வந்தவாறு கண்டு கொள்க. |
சூ.120: | அவ்வே |
| இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப |
[2] |
க-து : | இனி விதிக்கப் பெறும் இலக்கணங்கட்குத் தோற்றுவாய் கூறுகின்றது. |
|
உரை : மேற்கூறிய விளியும், அவற்றைக் கொள்ளும் பெயரும் கொள்ளாப் பெயரும் இவை எனத் தெற்றென அறிந்து கோடற்குப் பொருள் தோன்ற இனிக் கிளந்து கூறப்படும். |
மேற்கூறிய விளி என்றது, இயல்பாயும் திரிந்தும் நிற்கும் விளிமரபினை. 'கிளக்கப்படும்' என்பது கிளப்ப எனக்குறைந்து நின்றது. அன்றி இலக்கண நூலோர் கிளந்தே கூறுபவாதலின் யானும் அவ்வாறே கூறுவென் எனக் கருத்துக் கூறலுமாம். |