விளியேற்ற பெயர்களே விளிவேற்றுமையாகி நிற்கும் ஒற்றுமை நயங்கருதி "அவ்வே" என்றார். அதனான் அவ்வே என்னும் சுட்டு, விளிவேற்றுமையது திரிபுகள், கொள்ளும் பெயர், கொள்ளாப்பெயர் ஆகிய மூன்றையும் சுட்டிநிற்றல் புலனாகும். அன்றி 'அவ்வே' என்பது கொள்ளும் பெயர், கொள்ளாப் பெயர்களை மட்டும் சுட்டி நின்றது எனின், மேலைச் சூத்திரத்து "விளி எனப்படுவ" என்றது நின்றுவற்றும். மற்றும், இஈ யாகும் ஐஆய் ஆகும் (விளி-4.) ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் (விளி-5) அன் என் இறுதி இயற்கை யாகும் (விளி-13). என்றாற் போல வருவனவெல்லாம் விதிபெற்று அடங்காவாய்க் குன்றக் கூறலாய் முடியும் என்க. | சூ. 121 : | அவைதாம் | | இஉஐஓ என்னும் இறுதி | | அப்பால் நான்கே உயர்திணை மருங்கின் | | மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. | (3) | க-து : | உயர்திணையுள் விளிகொள்ளும் உயிரீற்றுப்பெயர்கள் இவைஎன்கின்றது. | | விளிக்கப்படுதலை உணர்ந்து, விளிப்போர் விதிக்கும் ஏவலையும் வியங்கோளையும் ஏற்றுச் செயல்படுந்திறன் உடையவை ஆறறிவுடைய உயர்திணைப் பொருளும், அக்கிளைப்பிறப்பினவாகிய பொருளுமே எனினும் "உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்துக்" கூறுதலும் (பொரு.2.) "ஞாயிறு திங்கள் அறிவே நாணே.........சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்" (செய்யுள் - 192) என்பவற்றான் அஃறிணைப் பொருள் மாட்டுச் சொல் நிகழ்த்தலும் செய்யுள் மரபாகலின் ஆசிரியர் உயர்திணைப்பெயர். அஃறிணைப்பெயர், விரவுப்பெயர் ஆகிய மூவகைப் பெயர்களும் விளிகொள்ளும் மரபினை ஓர்ந்து விதி கூறத்தொடங்குகின்றார். | அங்ஙனங்கூறுங்கால், எல்லாப் பெயர்களும் பொருட்பகுதியான் இருகூறாய் அடங்குதலின் பெயரியலுள் விதந்தோதப் பெறும் உயர்திணைப் பெயர்களையும், உயர்திணைப் பொருளுணர்த்தி வரும் விரவுப் பெயர்களையும், ஆகுபெயராயும் அன்மொழித் தொகையாயும் உயர்திணை உணர்த்தி வரும் பெயர்களையும் உயர்திணைப்பெயர் என ஒன்றாக அடக்கியும் அஃறிணைப் பொருளுணர்த்தி வரும் விரவுப் பெயர்களைத் தனியாகவும், அஃறிணைப் பெயர்களையும் அஃறிணைப் பொரு |
|
|