ளுணர்த்தி வரும் ஆகுபெயர் அன்மொழித்தொகைப் பெயர்களையும் அஃறிணைப் பெயர் என ஒன்றாகவும் அடக்கி ஓதுகின்றார். இதனை "உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே" (விளி-3) என்றும், கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் (விளி-33) என்றும், புள்ளியும் உயிரும் இறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் (விளி-34) என்றும் கூறுவதனான் அறியலாம். |
உரை: கிளக்கப்படுபவைதாம், உயர்திணைப் பாலவாய் உயர்திணைப் பொருளைக் கருதிய உயிரீற்று விளிகொள் பெயர் இ உ ஐ ஓ என்னும் இறுதியை உடைய அக்கூற்று நான்குமேயாம். |
'அவைதாம்' என்பது அதிகாரச் சூத்திரமாய் இனி வருகின்றவற்றொடெல்லாம் இயையும், ஏகாரம் பிரிநிலை. உயிரீறும் உயிர்மெய்யீறும் அடங்க "அப்பால்நான்கே" என்றார். விளிகொள் பெயராகிய அவைதாம் நான்கு எனக் கூட்டிப் பொருள் கொள்க. எடுத்துக்காட்டுக்கள் சிறப்புச் சூத்திரத்துள் காட்டப் பெறும், நச்சினார்க்கினியர் ஈண்டு அஃறிணைப் பெயர்களை எடுத்துக் காட்டுதல் முரண்படக் கூறலாகும். |
சூ. 122 : | அவற்றுள் |
| இஈ யாகும் ஐஆய் ஆகும் |
[4] |
க-து : | இகர ஐகார ஈறுகள் விளி கொள்ளுமாறு கூறுகின்றது. |
|
உரை :மேற்கூறியவற்றுள் இகர ஈறு ஈஎனத் திரியும், ஐகார ஈறு ஆய் எனத்திரியும். 'ஆகும்' என்றது திரிந்து விளிவேற்றுமையாகும் என்றவாறு. |
எ.டு :நம்பீ வருக ! நங்காய் செல்க ! எனவும், சாத்தீ வருக ! எனவும் வரும். சுடர்த்தொடீ கேளாய் ! எனவும் வரும். அன்னை - அன்னாய் எனவும் எந்தை - எந்தாய் எனவும் வரும். முறைப் பெயர்க்குச் சிறப்பு விதி மேற்கூறுப. |
சூ. 123 : | ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் |
[5] |
க-து : | உகர ஈறும் ஓகார ஈறும் விளி கொள்ளுமாறு கூறுகின்றது. |
|
உரை :எஞ்சி நின்ற ஓகாரமும் உகரமும் ஏகாரத்தொடு பொருந்தி விளிவேற்றுமையாகும். |