166விளி மரபு

எ-டு :கோவே   வருக !   வேந்தே   வருக ! எனவரும், இவ்உகரம்
சார்பெழுத்து என்பது உணர அதனைப்பிற் கூறினார்.
 

சூ. 124 :

உகரந் தானே குற்றிய லுகரம் 
[6]
 

க-து :

இஃது ஐயமகற்றுகின்றது.
 

உரை :மேல்  வாளா  கூறிய உகரம் சார்பெழுத்துக்களுள்  ஒன்றாகிய
குற்றியலுகரமாகும்.     முற்றியலுகரமாயின்     உடம்படுமெய்    பெற்றுப்
புணர்தலல்லது      உயிரேற      இடந்தாராதாகலின்,     உகரந்தானே
குற்றியலுகரம் என விளக்கினார் என்க.
 

சூ. 125 :

ஏனை உயிரே உயர்திணை மருங்கின் 

தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்  

(7)
 

க-து :

உயர்திணையிடத்து விளியேலா உயிரீறுகள் இவை என்கின்றது.
 

உரை :மேற்கூறிய     நான்குமல்லாத    ஏனைய  எட்டு  உயிரீற்று
உயர்திணைப்    பெயர்கள்    விளி   கொள்ளா எனக்  கூறுவர் புலவர்.
ஏ-தாம் என்பவை இசைநிறை.
 

கொள்பவை   இவை எனவே கொள்ளாதவை தாமே பெறப்படுமாயினும்
இங்ஙனம்   எடுத்துக்   கூறுதல்  பிறிதொரு பயன் நோக்கியதாகும். இதன்
பயனாவது : எடுத்தோதாத  அகர ஈறும்,   ஆகார  ஈறும்,  முற்றுகரஈறும்
ஊகார  ஈறும் முறையே (மக) மகவே ! (எல்லா) எல்லா ! (திரு)  திருவே !
(ஆடூஉ)  ஆடூவே  என  ஏகாரம்   பெற்றும் இயல்பாயும் விளி ஏற்றலும்,
திரியும் எனப்பெற்ற இகர ஐகாரங்கள் (கணி) கணியே ! (இறை)  இறையே !
என ஏகாரம் பெறுதலும். மலர்விழி - பணிமொழி   என்றாற்போல   வரும்
இருபெயராட்டு    ஆகுபெயர்களின்  இகர ஈறு ஈயாகத்திரியாமல் ஏகாரம்
பெறுதலும் பிறவும் சான்றோர் வழக்குநோக்கிக் கொள்ள வைத்தலாம் என்க.
 

சூ. 126 :

அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்

 

இயற்கைய வாகும் செயற்கைய என்ப
(8)
 

க-து :
 

விகாரவகையான்    வரும்    இகரஈற்றுப் பெயர்கட்கு எய்தியது
விலக்குகின்றது.
 

உரை:  இயல்பாகவன்றி  அளபெடுத்தலான் விகாரப்பட்டு மிக்குநிற்கும்
இகர     ஈற்றுப்     பெயர்கள்    திரியாமல்    இயற்கையவாய்  வரும்
இலக்கணத்தனவாகும்.