விளி மரபு167

எ-டு :தொழீஇ !   செல்க   எனவரும்.  தொழீஇ என்பது தொழுவன்
என்பதன்   பெண்பாற்சொல். அது குருவி - குரீஇ  என  வருதல் போன்ற
இயற்கை அளபெடையாம்.
 

குன்றிசை   மொழிவயின்நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத்திம்பர் ஒத்த
குற்று   எழுத்தே  (மொழி - 8).  என்பதனான்  அளபெடைக்கண் நிற்கும்
குற்றுயிரைக்   குற்றெழுத்தீறாகவே    கொள்ளல்    வேண்டும்   என்பது
விதியாகலின் இங்ஙனம்  அளபெடைக்கண் மிக்கு   நிற்பவை   நெடிலீறோ
குறிலீறோ   என்னும்   ஐயத்தை  நீக்கிக்  குறிலீறே என்பது அறிவித்தற்கு
"அளபெடை   மிகஉம்   இகர   இறுபெயர்"  என்றார். இவ்வாறு வருவன
விகாரப்   பெயர்களாம்  என்பதனை   உணர்த்த  "செயற்கைய"  என்றும்
கூறினார்.       இச்சூத்திரத்திற்குத்     தமிழ்      மொழியமைப்பையும்
ஆசிரியர்கருத்தையும் ஓராமல் உரையாசிரியன்மார் ஒவ்வா விளக்கம் கூறிச்
சென்றனர்.
 

சூ. 127 :

முறைப்யெர் மருங்கின் ஐயென் இறுதி 

ஆவொடு வருதற்கு உரியவுயும் உளவே 

[9]
 

க-து :
 

ஐகாரஈற்று   முறைப்பெயர்கட்கு  எய்தியதன்மேற்  சிறப்பு  விதி
கூறுகின்றது.
 

உரை:  முறைப்   பெயர்களிடத்து    ஈறாக    வரும்  ஐகார இறுதிச்
சொற்கள்   ஆகாரமாக   வருதற்கு   உரிமை   உடையனவும்  உளவாம்.
ஆவாகத்திரிதலை ஆவொடுவருதல் என்றார். உம்மை - எதிர்மறை.
 

எ-டு :அன்னை - அன்னா  எனவும் தாதை - தாதா (தாத்தா) எனவும்
வரும்.  எதிர்மறை  உம்மையான்  தந்தை,  தங்கை,  தவ்வை  முதலியவை
ஆவாகத்திரியாமற்      பொது     விதியே     பெறுமெனக்   கொள்க.
உரையாசிரியன்மார்  காட்டும்    'அத்தை'   என்பது  எம்முறைப்  பெயர்
என்பது   புலனாகவில்லை.   அத்தா  என்பது  அத்தன் என்னும் முறைப்
பெயர்  ஈறு   கெட்டு   அயல்    நீண்டதாகும்.   ("அஞ்சியத்தை  மகள்
ஆந்தையார்" எனவரும் புலவர் பெயர் ஆய்வுக்குரியதாகும்).
 

சூ. 128 :

அண்மைச் சொல்லே இயற்கை யாகும்
(10)
 

க-து :

அண்மை விளிக்கண் மேல் எய்திய விதிகளை விலக்குகின்றது.
 

உரை :மேற்கூறிய   நான்கு ஈறுகளும் அண்மை விளிக்கண் இயல்பாக
வரும். சொல் என்றது விளியை.