எ-டு :நம்பி வாழி ! நங்கை வாழி ! வேந்து வருக ! கோ காணாய் ! எனவும், மகவாராய் ! எல்லா வருக ! ஆடூ செல்க ! எனவும்வரும். |
இச்சூத்திரத்தை உயிரீறுகளின் பின்னரும் புள்ளியீறுகளின் முன்னரும் அரிமா நோக்காக வைத்தார், புள்ளியீற்று அண்மை விளிக்கும் இதுவே விதியாகலின் என்க. |
சூ. 129 : | னரலள என்னும் அந்நான் கென்ப |
| புள்ளி யிறுதி விளிகொள் பெயரே |
[11] |
க-து : | விளியேற்கும் புள்ளியீற்றுப் பெயர்களாமாறு கூறுகின்றது. |
|
உரை :பதினொரு புள்ளி ஈறுகளுள் னரலள என்னும் அந்நான்கு புள்ளியை இறுதியாக உடைய பெயர்கள் உயர்திணைக்கண் விளிகொள்வன எனக் கூறுவர் புலவர். |
முறையிற் கூறாது னகரம் முன் வைத்தார் னகரமும் ரகரமும் அன் ஆன் அர் ஆர் இர் என நின்று அவ்வவற்றிற் கேற்ற விதி பெற்று வருமென் பதறிவித்த தற்கு என்க. |
சூ. 130 : | ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா |
[12] |
க-து : | உயர்திணை மருங்கின் விளியேலாத புள்ளியீற்றுப் பெயர்கள் இவை என்கின்றது. |
|
உரை: மேற்கூறிய நான்குமல்லாத ஞணநம யவழ என்னும் ஏழுபுள்ளியீற்றுப் பெயர்கள் உயர்திணைக்கண் விளி கொள்ளாவாம். |
இங்ஙனம் வாராதனவற்றைக் கூறியதன் பயனாவது : னரலள என்பவற்றிற்கு இனி ஓதும் விதிகளேயன்றிச் சிறிது வேறுபட்ட விதிகளையும் அவை எய்தும் என்பதும், கொள்ளா என்றவற்றுள் ணகரமும் யகரமும் ழகரமும் சிறுபான்மை விளியேற்று வருமென்பதும் பெறுதலாம். அவற்றை அவ்வவ் ஈறுபற்றி ஓதும் சூத்திர உரையுள் கண்டு கொள்க. |
கொள்ளா என்றவற்றுள் ணகர ஈறு ஆண்வருக ! ஆணேவருக ! என்றும் யகர ஈறு 'விளங்கு மணிக்கொடும் பூண் ஆய் !' (புறம் - 130) எனவும், விறற் சேய் வருக ! எனவும், அருந்திறல், பெருந்திறல் என்றாற்போல ழகர ஈறு அரும்புகழ் வருக ! பெரும்புகழ் வருக ! என ஆகுபெயராயும்வரும். |