எனது அன்பிற்குரிய பாலசுந்தரம் எழுதிய தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை யான் வேண்டிக் கொண்டவாறு விரைந்து வெளிவந்துள்ளதைப் பார்த்து மகிழ்ந்தேன். பிற செய்திகளை எழுத்ததிகார வாழ்த்துரையில் சொல்லியிருக்கிறேன். அடுத்துப் பொருளதிகார உரையும் உடன் வெளிவர அம்பிகை திருவருள் புரியப் பிரார்த்திக்கிறேன். இவ் உரை நூல்களைத் தமிழ்ப் பெருமக்களும் ஆய்வாளர்களும் மாணாக்கர்களும் வாங்கிப் படிப்பதன் வாயிலாக இவருக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பார்களாக. இவர் மேலும் பல்லாண்டுகள் உடல்நலத்தோடு இருந்து முத்தமிழ்க்கும் தொண்டாற்றி மூவாப்புகழும் ஓவா ஆக்கமும் பெற்று வாழ எல்லாம் வல்ல சவுந்தர நாயகி சமேத சுந்தரேசப் பெருமான் திருவடிகளைப் போற்றி வாழ்த்துகிறேன், வாழ்க ! |