உரை :ஆன் என்னும் இறுதி இடைச்சொல் பற்றி வரும் பெயரினது ஈறு திரியாது இயல்பாகவரும். |
எ-டு :சேரமான் வருக ! மலையமான் வருக ! எனவரும். "ஏனைப்புள்ளியீறு" என்றதனான் அம்மான் என்பது அம்மானே எனவும் கன்னான் என்பது கன்னா எனவும் வாயிலான் என்பது வாயிலோய் ! எனவும் வாயிலோயே ! எனவும் வருதல் கொள்க. |
சூ. 134 : | தொழிலிற் கூறும் ஆன்என் இறுதி |
| ஆய்ஆ கும்மே விளிவயி னான |
[16] |
க-து : | இதுவுமது. |
|
உரை:விளிவேற்றுமைக்கண் ஆயினவாய்த் தொழிற்சொல்லாற் கூறப்பெறும் பெயரிறுதி ஆன் என்னும் ஈறு ஆய் எனத் திரிந்து வரும். |
எ-டு :உண்டான், தின்றான் என்னும் வினையாலணையும் பெயர்கள் உண்டாய் வருக ! சென்றாய் வருக ! எனவரும். உடையான், குழையான் என்னும் குறிப்பு வினைப் பெயரும் உடையாய் ! குழையாய் ! என வரும். "ஏனைப்புள்ளியீறு" என்றதனான், உண்டான் வருக என இயல்பாயும் உண்டோய், தின்றோய் என 'ஆய்' 'ஓய்' எனத் திரிந்தும் வரும். |
சூ. 135 : | பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே |
(17) |
க-து : | இதுவுமது. |
|
உரை:பண்படியாகத் தோன்றி வரும் ஆனீற்றுப் பெயரும் தொழிலிற் கூறும் பெயரிலக்கணத்தொடு ஒரு தன்மைத்தாம். என்றது ; ஆன் ஆயாகத் திரிந்துவரும் என்றவாறு. |
எ-டு :கரியான் என்பது கரியாய் வருக ! எனவும் (நெடியான்) நெடியாய் ! எனவும் வரும். கரியான் வருக ! என இயல்பாயும் கரியோய் ! எனத் திரிந்தும் வரும் எனக் கொள்க. |
சூ. 136 : | அளபெடைப் பெயரே அளபெடை இயல |
(18) |
க-து : | இதுவுமது. |
|
உரை: னகர ஈற்று அளபெடைப் பெயர்கள் இகர ஈற்று அளபெடைப் பெயரியல்பினவாம். |