உரை :ஆர், அர் என்னும் இடைச் சொற்களை இறுதியாக உடைய ரகர ஈற்று உயர்திணைப் பெயர்கள் ஈர் என்பதனொடு பொருந்தி விளியேற்கும். அர் ஆர் என்பவை ஈர் எனத் திரிந்து நிற்கும் என்றவாறு. |
எ-டு :சான்றார் என்பது சான்றீர் வருக ! எனவும், மாந்தர் என்பது மாந்தீர் வருக ! எனவும் கூத்தர்-கூத்தீர் எனவும் வரும். 'ஏனைப்புள்ளியீறு' என்றதனான் மாந்தர் வம்மின் ! கூத்தர் வம்மின் ! என இயல்பாக வருதலும்கொள்க. |
சூ. 140 : | தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் |
| வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே |
(22) |
க-து : | இதுவுமது. |
|
உரை: மேற்கூறிய ரகர ஈற்றுச் சொற்கள் தொழிலிற் கூறும் பெயர்களாயின் அவற்றொடு ஏகாரம் வருதலும் குற்றமின்று எனக்கூறுவர் வயங்கியோர். |
எ-டு :கற்றார் என்பது கற்றீரே வருக ! எனவும், உண்பார் என்பது உண்பீரே வருக ! எனவும் வரும். ஒருசார் பெயர்கள் (வந்தவர்) வந்தவரே (சென்றவர்) சென்றவரே எனவருதலும் கொண்டோரே ! உண்டோரே ! என ஆகாரம் ஓகாரமாகத் திரிந்து வருதலும் கொள்க. |
"ஏனைப் புள்ளியீறு" என்றதனான் :- நம்பியர் - நம்பியீரே; நங்கையர் - நங்கையீரே எனத் தொழிற் பெயரல்லாதன ஏகாரம் பெற்று வருதலும் பெண்டிர் - கேளிர் என்னும் இயல்பீற்றுப் பெயர்கள் பெண்டிரே - கேளிரே என ஏகாரம் பெற்று வருதலும் பெண்டிர் வருக ! என இயல்பாக வருதலும்கொள்க. |
சூ. 141 : | பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே |
(23) |
க-து : | இதுவுமது. |
|
உரை:பண்படியாகப் பிறந்த ரகார ஈற்றுப் பெயரும் அதனொடு ஒருதன்மைத்தாம். என்றது, ஈறு திரிந்து ஏகாரம் பெறுதலும் திரியாது ஏகாரம் பெறுதலும் இயல்பாதலும் ஆகுமென்றவாறு. |
எ-டு :கரியார் - கரியீரே வருக ! எனவும் வெளியர் - வெளியரே ! எனவும் கரியார் வருக ! எனவும் வரும். |