சூ. 142 : | அளபெடைப் பெயரே அளபெடை இயல |
(24) |
க-து : | இதுவுமது. |
|
உரை: ரகார ஈற்று அளபெடைப் பெயர்கள் னகார ஈற்று அளபெடைப் பெயர்களின் இயல்பினவாம். அஃதாவது திரிபின்றி இயற்கையாகவே விளியேற்றுவரும் என்றவாறு. |
எ-டு :மகாஅர் வருக ! சிறாஅர் வருக ! எனவரும். |
சூ. 143 : | சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன |
(25) |
க-து : | இதுவுமது. |
|
உரை: அவர், இவர், உவர் என்னும் ரகார ஈற்றுச் சுட்டுப் பெயர்கள் னகார ஈற்றுச் சுட்டுப்யெர்க்கோதி யாங்கு விளியேலா என்றவாறு. |
சூ. 144 : | நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்று |
| அம்முறை இரண்டும் அவற்றியல் பியலும் |
(26) |
க-து : | இதுவுமது. |
|
உரை: வேற்றுமை ஏற்றற்குரியதாகிய நும் என்னும் பெயரினின்று திரிந்த எழுவாய்ப் பெயராகிய நீயிர் என்பதும், ரகார ஈற்று வினாப்பெயராகிய யாவர் என்பதும் மேற்கூறிய சுட்டுப் பெயரியல்பாக நிகழும். என்றது ; இவையும் விளியேலா என்றவாறு. |
சூ. 145 | எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே |
| நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும் |
(27) |
க-து : | லகார ளகார ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்குமாறு கூறுகின்றது. |
|
உரை :புள்ளியீறு நான்கனுள் எஞ்சிநின்ற லகார ளகார ஈற்று உயர்திணைப் பெயர்கள் விளியேற்குமிடத்து ஈற்றயல் நின்ற குற்றெழுத்துக்கள் நீளுதல் வேண்டும். அங்ஙனம் நீளுதலே விளிவேற்றுமையாம் என்றவாறு. |
எ-டு :(குரிசில்) குரிசீல் வருக ! (தோன்றல்) தோன்றால் வாழ்க! எனவும் (மக்கள்) மக்காள் காண்மின் ! (அடிகள்) அடிகாள் கேண்மின் ! எனவும் வரும். "ஏனைப் புள்ளியீறு" என்றதனான் குரிசில் வருக ! அடிகள் வருக ! என இயல்பாயும், தாழ் |