குழலே ! அடிகளே ! என ஏகாரம் பெற்றும் "நீட்டம் வேண்டும்" எனப் பொதுப்படக் கூறியதனான் அடிகள் என்பது அடிகேள் ! எனத்திரிபாக நீண்டும் வருதல் கொள்க. |
சூ. 146 : | அயல்நெடி தாயின் இயற்கை யாகும் |
(28) |
க-து : | மேலதற்கு ஒருபுறனடை கூறுகின்றது. |
|
உரை :மேற்கூறிய லகார ளகார ஈற்றுப் பெயர்களின் ஈற்றயல் நெடிலாயே இருப்பின் அவை இயல்பாகவே விளியேற்கும். |
எ-டு :திருமால் காண்க ! பெருமாள் வருக ! எனவரும். 'ஏனைப் புள்ளியீறு' என்றதனான் இவை ஏகாரம் பெற்று வருதலும் கொள்க. திருமாலே ! பெருமாளே ! எனவரும். பெண்பால், கோமாள் எனக்காட்டுவர் உரையாளர். |
இனி நச்சினார்க்கினியர் நமர்காள் எனக்காட்டுவது இந்நூல் நெறிக்கு முரணாம். என்னை? 'கள்' ஈறு அஃறிணைக்கல்லது வாராதென ஆசிரியர் ஓதுதலின் என்க. "நமரங்காள்" என்பது நமர் அங்கங்காள் என்பதன் மரூஉ வெனக் கொள்ளத்தகும். கிளைநுதற்பெயர் 'கள்' விகுதியொடு கூடி விளியேற்றல் இடைக்காலத் தெழுந்த வழூஉ வழக்காம் என்க. |
சூ. 147 : | வினையினும் பண்பினும் |
| நினையத் தோன்றும் ஆள்என் இறுதி |
| ஆய்ஆ கும்மே விளிவயி னான |
(29) |
க-து : | ஒருசார் ளகர ஈற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
|
உரை :விளிவேற்றுமைக்கண் ஆயினவாய், வினையடியானும் பண்படியானும் கருதத் தோன்றிவரும் பெயரிறுதியாகிய ஆள் என்னும் இடைச்சொல் ஆய் எனத் திரிந்து வரும். |
எ-டு :உடன் பிறந்தாள், என்பது உடன் பிறந்தாய் வருக ! எனவும் கரியாள் - நெடியாள் என்பவை கரியாய் வருக ! நெடியாய் வருக ! எனவும் வரும். "விளிவயினான" என்ற மிகையான் செய்யுட்கண் ஆ ஓவாக நிற்குமிடத்து ஓய் என வருதலும் கொள்க. நின்றோள் - செய்யோள் - மாயோள் என்பவை, நின்றோய் ! செய்யோய் ! மாயோய் ! எனவரும். "ஏனைப் புள்ளியீறு" என்றதனான் ஏகாரம் பெறுதலும் கொள்க. |