சூ. 148 : | முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல |
(30) |
க-து : | ளகர ஈற்று முறைப் பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. |
|
உரை :ளகார ஈற்று முறைப் பெயர்கள் னகார ஈற்று முறைப் பெயரியல்பினவாய் ஏகாரம் பெற்று வரும். எ-டு : (மகள்) மகளே வாழ்க ! மருமகளே வருக ! எனவரும். |
சூ. 149 : | சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் |
| மேற்கிளந் தன்ன என்மனார் புலவர் |
(31) |
க-து : | ளகர ஈற்றுச் சுட்டுப்பெயரும் வினாப்பெயரும் விளியேலா என்கின்றது. |
|
உரை: சுட்டெழுத்துக்களை முதலாகக் கொண்டுவரும் ளகர ஈற்றுச் சுட்டுப் பெயர்களும் ளகர ஈற்று வினாப் பெயரும் மேல் னகர ஈற்றிற்குக் கூறிய தன்மையவாம். என்றது, இவையும் விளியேலா என்றவாறு. |
சூ. 150 : | அளபெடைப் பெயரே அளபெடை யியல |
(32) |
க-து : | லகர ளகர ஈற்று அளபெடைப் பெயர்கள் விளி ஏற்குமாறு கூறுகின்றது. |
|
உரை :லகார ளகார ஈற்று அளபெடைப் பெயர்கள் ரகாரஈற்று அளபெடைப் பெயரியல்பினவாம். அஃதாவது திரியாது இயல்பாக விளியேற்கும் என்றவாறு. எ-டு : மாஅல் வருக ! வேஎள் வருக ! எனவரும். |
சூ. 151 : | கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் |
| விளம்பிய நெறிய விளிக்குங் காலை |
[33] |
க-து : | அஃறிணைப் பொருளுணர்த்திவரும் விரவுப் பெயர்கள் விளிஏற்குமாறு கூறுகின்றது. |
|
உரை :உயர்திணைப் பெயர்க்கண் விளிகொள்ளுதற்குரியனவாக எடுத்தோதப் பெற்ற இறுதிகளையுடையவாய் வரும் அஃறிணை விரவுப்பெயர்கள் விளிக்கப்படுமிடத்து அவ்வவ் ஈறுபற்றி உயர்திணைப் பெயர்கட்குக் கூறிய நெறியினவாகும். |
கிளந்த இறுதியாவன, இ உ ஐ ஓ என்னும் உயிரீறுகளும் ன ர ல ள என்னும் புள்ளியீறுகளுமாம். ஆண்டு அவற்றிற்குக் கூறிய விதிகளொடு விதப்பானும் உத்தியானும் கொண்ட விதிகளுள் ஏற்பன இவற்றிற்கும் கொள்க. |