எ-டு :(சாத்தி) சாத்தீ செல்க ! எனவும் (விருந்து) விருந்தே வருவாய் ! எனவும் (கோதை) கோதாய் உண்க ! எனவும் (சாத்தன்) சாத்தா உழுவாய் ! எனவும் (கூந்தல்) கூந்தால் வளர்க ! எனவும் (மாக்கள்) மாக்காள் செல்க ! எனவும் வரும். இனி முறைப் பெயர், தாயே வருக ! தந்தையே வருக ! மகனே வருக ! மகளே வருக ! எனவரும். |
ஓகார ஈறும் ரகர ஈறும் பற்றி அஃறிணை விரவுப் பெயர் வந்தவழிக் கண்டுகொள்க. ரகரஈறு ஆகுபெயராய் (உயிர்) உயிரே வருக ! எனவருதற்காகும். இவையாவும் அண்மை விளிக்கண் இயல்பாதலும் கொள்க. 'விளிக்குங்காலை' என்றதனான் கிளந்த இறுதியல்லாத அகர ஆகார ஈறுகள் மகவே வருக ! - (பிணா) பிணாவே வருக! என விளிஏற்றல் கொள்க. |
சூ. 152 : | புள்ளியும் உயிரும் இறுதி யாகிய |
| அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் |
| விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின் |
| தெளிநிலை உடைய ஏகாரம் வரலே |
[34] |
க-து : | அஃறிணைப் பெயர்கள் விளி கொள்ளுமாறு கூறுகின்றது. |
|
உரை :அஃறிணைப் பொருள் பற்றிப் புள்ளியும் உயிரும் இறுதியாக வரும் எல்லாப் பெயர்களும் விளிக்கும் நிலைமை எய்தும் காலந்தோன்றின் ஏகார இடைச் சொல்லை ஏற்று விளிவேற்றுமையாதல் தெளியும் நிலையுடையவாகும். வரையறைப் படாமையின் புள்ளியும் உயிரும் எனப் பொதுப்படக் கூறினார். |
செய்யுள் வழக்கின்கண் முன்னிலையாக்கலும் சொல்வழிப்படுத்தலும் வேண்டுங்கால், சொல்லுந போலவும் கேட்குந போலவும் அஃறிணைப் பொருள்கள் விளிக்கப்படுதலின் "விளிநிலை பெறுஉம் காலந் தோன்றின்" என்றார். ஏகாரம் பொதுநிலையான் விளித்தற்குரிய இடைச்சொல்லாய் வழங்குதலின் "தெளிநிலை உடைய ஏகாரம் வரலே" என்றார். சுட்டுப் பெயரும் வினாப் பெயரும் பொதுநிலையான் விளியேலாமை பெறப்பட்டமையின் விதந்து கூறாராயினார். |
இனி ஏகாரம் வருதல் வேண்டும் என யாப்புறுத்தாமல் 'தெளிநிலை உடைய' என்றதனான் சிறுபான்மை உயர்திணைக்கு ஓதிய விதிகளுள் பொருந்துவன பெற்று வருமென்பதும், 'புள்ளியீறு பதினொன்றனுள் ஞகரம் பெயர்க்கீறாகாமையானும் வகரம் சுட்டுப் பெயராயும் உரிச்சொல்லாயும் |