எ-டு :விள, விளவே ! புறா, புறாவே ! புலி, புலியே ! தீ, தீயே ! முசு, முசுவே ! வண்டு, வண்டே ! பூ, பூவே ! மரை, மரையே !, சோ, சோவே ! என உயிரீற்று அஃறிணைப் பெயர்கள் வரும் (முசு-குரங்கு; சோ - அரண்) மண், மண்ணே ! வெரிந் - வெரிநே ! மரம், மரமே ! கடுவன், கடுவனே ! புல்வாய், புல்வாயே ! தகர், தகரே ! குயில், குயிலே ! பறழ், பறழே ! உதள், உதளே ! எனப் புள்ளியீற்று அஃறிணைப் பெயர்கள் வரும். (வெரிந் - முதுகு; பறழ் - பறவைக்குஞ்சு; உதள்-ஆடு) |
இனித், "தெளிநிலை உடைய" என்றதனான். வருந்தினை வாழி என் நெஞ்சம் ! கருங்கால் வெண்குருகு ஒன்றுகேண்மதி ! என இயல்பாயும் மந்தி-மந்தீ ! என இகரம் ஈகாரமாயும், நாரை ! நாராய் என ஐகாரம் ஆய் ஆகியும் அலவன் - அலவ ! என ஈறு குன்றியும் குறுமுயல் - குறுமுயால் ! ஏன ஈற்றயல் நீண்டும் பிறவானும் சான்றோர் வழக்கினுள் வருவன கொள்க. |
எ-டு :(நம்பி) நம்பீஇ ! நம்பீஇஇ ! (ஆடூ) ஆடூஉ ! சாத்தா, சாத்தாஅ, மலையமான், மலையமாஅன், (மால்) மாஅல் -மாஅஅல் ! எனவும் (தொழீஇ) தொழீஇஇ ! (குரீஇ) குரீஇஇ ! எனவும் விளவேஎ ! புறவேஎ ! எனவும் வரும். |