பொருளை நோக்கி எழும் உணர்வும், பருப்பொருட்கும் நுண்பொருட்கும் உள்ள இயைபும், மொழிப் பொருட்குக் காரணமாதலின் சொற்கள் யாவும் காரணத்தை அடிப்படையாகக் கொண்டனவேயாம். உணர்வை அடிப்படையாகக் கொண்டு இருதிணைப் பொருளையும் சுட்டி வழங்குதற் கிடப்பெறும் குறியீடுகளே பெயர்ச்சொல் எனப்படும் என்க. |
எ-டு :நிலம், நீர், தீ, வளி, வான், நம்பி, நங்கை, புள், விலங்கு, மரம், மலர், செம்மை, கருமை, உண்மை, நன்மை எனவும்; உண்டான், உண்டது, கரியன், கரியது எனவும், கொன்(னூர்) (பண்டுகாடு) மன் (கேண்) மதி எனவும், உறு (கால்) தவப் (பெரியன்) எனவும் வரும். |