சூ. 158 : | திரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் |
| இருபாற் றென்ப பொருண்மை நிலையே |
[3] |
க-து : | பொருண்மை தெரிதல் இருவகைப்படுமென்கின்றது. |
|
உரை : மேற்கூறப்பெற்ற பொருண்மை தெரிதலாகிய நிலையாவது, ஒரு சொல் பொருளை வெளிப்படையாகத் தெரிவித்துக் குறிப்பினின்று வேறுபட நிற்றலும், குறிப்பானே பொருள் தெரிய நிற்றலும் என இரு கூறுபாட்டினை உடைத்து என்று கூறுவர் புலவர். |
'தெரிபு' என்பது 'அரில்தபத்தெரிந்து' (பாயிரம்) என்றாற் போலத் தெரிவித்து என்னும் பொருள்பட நின்றது. வேறு நிற்றலாவது குறிப்புச் சொல்லின் வேறுபட நிற்றல், அஃதாவது சொல் தனக்குரிய நேரிய பொருளைக் காட்டி நிற்றல். |
எ-டு : அவன், நிலம், மலை, வந்தான், சென்றான் என்பவை திரிபின்றித் தம்பொருளை நேரே விளக்கி நின்றன. ஒருவர் வந்தார் என்புழி அவ்ஒருவர் ஆடூஉ அல்லது மகடூஉ என்பதைப்பின் முன் வரும் சொற்களான் அறிந்து கொள்ளுமாறு நிற்றலும் சோறுண்ணா நிற்பவன் கற்கறித்து நன்கட்டாய் என்புழித் தீங்கட்டாய் எனப் பொருள் தருதலும், கடுத்தின்றான் என்பது மரத்தை உணர்த்தாமல் அதன் காயை உணர்த்தலும், இவ்வாறு வரும் அன்மொழித் தொகைகளும் உவமப் போலியாயும் உள்ளுறை உவமமாயும் வருவன பிறவும் குறிப்பாற் பொருள் தருவனவாம். பொருண்மை நிலை இருபாற்றெனவே சொன்மை நிலை ஒன்றே என்பது பெறப்படும். |
சூ. 159 : | சொல்லெனப் படுவ பெயரே வினையென்று |
| ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே |
[4] |
க-து: | மேற்கூறப்பெற்ற சொற்கள் தகவுபற்றி வகைப்படுமாறு கூறுகின்றது. |
|
பொருள்:சொல்லென்று சிறப்பித்துக் கூறப்படுபவை பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் என அவ்விரண்டு கூறாகும் என்று சொல்லுவர் இலக்கண நெறியறிந்தோர். எனப்படுதல் - சிறப்பித்துச் சொல்லப்படுதல். |
இவை சிறப்புடையன எனவே ; சிறப்பில்லாதனவும் உள என்பது பெறப்படும். அவற்றை மேற்கூறுவார். சிறப்பாவது பால் முதலிய உறுப்பான் நிறைந்து நிற்றல். சிறப்பின்மையாவது அவற்றிற்குத் துணையாயமைந்தும் சார்ந்தும் பொருள் |