தந்து நிற்றல். இருதிணைப் பொருளின்றிச் சொற்கள் தோன்றுதலின்றாகலான் அப்பொருளைச் சுட்டிவரும் பெயர் முன்னும் அப்பொருளின்புடைபெயர்ச்சி முதலியவற்றை உணர்த்தி வரும் வினை பின்னுமாக வைக்கப்பெற்றன. |
சூ. 160 : | இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் |
| அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப |
[5] |
க-து : | சிறப்பில்லா ஏனைய இரு சொற்கள் இவை என்கின்றது, |
|
பொருள் :இடைச்சொல்லும், உரிச்சொல்லும் மேற்கூறிய பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றின் வழியாகவும் அவற்றின் இடமாகவும் தோன்றி நிற்கும். |
"அவற்றுவழி மருங்கிற் றோன்றும்" என்றதனான் இவற்றின் சிறப்பின்மை உணரலாம். வழியினும், மருங்கினும் என விரித்துப் பொருள் கொள்க. அவற்றின் வழி மருங்காகி அவற்றை வேறுபடுத்தும் - நிறைவித்தும் தம்பொருளுணர்த்தும் நிலையை நோக்கி இடைச்சொல் முன்வைக்கப்பட்டது. சிறப்புடையவை இரண்டு சிறப்பில்லாதவை இரண்டு என வகைப்படுத்தியவாற்றான் சொல்லின் தொகை நான்கென்பது பெறப்பட்டது. இவற்றின் இயல்புகளை நான்கு இயல்களாக அமைத்துக் கூறுதலானும் அது தெளியப்படும். |
சூ. 161 : | அவற்றுள் |
| பெயரெனப் படுபவை தெரியுங் காலை |
| உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் |
| ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் |
| அம்மூ வுருபின தோன்ற லாறே |
(6) |
க-து : | இது முதலாகப் பெயர்ச் சொற்களுக்குரிய சிறப்பிலக்கணங் கூறத் தொடங்கி அவை திணைபற்றி வகைப்படுமாறு இச்சூத்திரத்தான் கூறுகின்றார். |
|
பொருள் :மேற்கூறப்பெற்றநால்வகைச் சொற்களுள் பெயர்ச்சொல் என்று கூறப்படுவனவற்றை ஆராயுங்கால், அவை தோன்றுமாற்றான் உயர்திணைக்கே உரிமை உடையனவும், அஃறிணைக்கே உரிமையுடையனவும் அவ்விருதிணைகட்கும் ஒருங்கொத்த உரிமையுடையனவும் என அம் மூன்று படிவத்தனவாகும். |
"உரிமையுடையனவும்" என்பது உரிமையும் என விகாரப்பட்டுநின்றது. உருபென்றது (உருப்படி) ஈண்டு |