இனி, இச்சூத்திரத்திற்கு உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் கூறும் வலிந்துரை தொடர்மொழி பற்றியதாகலின் ஈண்டைக்கு ஒவ்வாமை அறிக. "அவன்இவன் உவன்என வரூஉம் பெயரும்" என்பது முதலாக ஆசிரியர் ஈறுபற்றியும் எடுத்தோதலின், ஈறுபற்றி உணர்த்தலாகாமையின் உரியவை உரிய என்றார் என்னும் சேனாவரையர் கருத்தும் பொருந்தாமை அறிக. |
சூ. 163 : | அவ்வழி |
| அவன்இவன் உவன்என வரூஉம் பெயரும் |
| அவள்இவள் உவள்என வரூஉம் பெயரும் |
| அவர்இவர் உவர்என வரூஉம் பெயரும் |
| யான்யாம் நாம்என வரூஉம் பெயரும் |
| யாவன் யாவள் யாவர் என்னும் |
| ஆவயின் மூன்றொடு அப்பதி னைந்தும் |
| பாலறி வந்த உயர்திணைப் பெயரே |
[8] |
க-து : | உயர்திணைக்குரியவாய் வரும் ஒருசார் பெயர்ச் சொற்கள் இவை என்கின்றது. |
|
உரை :மேல் உரியவை உரிய எனக்கூறிய முறைமையான் அவன் முதலாக யாவர் ஈறாகக் கூறப்பெற்ற அப்பதினைந்து சொற்களும் உயர்திணைக்கே உரிய பெயர்ச்சொற்களாம். வழக்குப்பயிற்சி குறைந்தவையாதலின் வினாப்பெயர்களைப் பிரித்தோதினார். |
யான் என்பது ஆடூ, மகடூவாகியவற்றுள் ஒன்றனை வரைந்துணர்த்தா தாயினும் உயர்திணை ஒருமை உணர்த்தலின் பாலறிகிளவியாயிற்று. ஈண்டுப் பால் என்றது ஒருமைப் பன்மைப் பாலையே என்பது இதன் புறனடைச் சூத்திரத்தான் அறிக. இது முதலாக நான்கு சூத்திரங்களான் உயர்திணைப் பெயர்கள் விதந்து கூறப்படுகின்றன. |
இவை பிரிப்பப்பிரியா ஒருமொழிப் புணர்ச்சியான் அமைந்த சொற்களாதலின் சுட்டு முதலாகிய னகரம் என்றாற்போலக் கூறாமல் அவற்றையே எடுத்தோதினார் என்க. இடைக்கால நூலார் இந்நெறியுணராது வழுவினர். |
ஆசிரியர் இருதிணை ஐம்பாற் சொற்களை வகுத்துக் கூறுகின்றார் எனப்பிறழக் கருதிய நச்சினார்க்கினியர் நம்பி, |