பெயரியல்189

அவை முதலாகிய  பெண்டன் கிளவி என்பது : சுட்டுக்களை முதலாகக்
கொண்டு பெண்மை  பற்றி  வரும்  பெயர்ச் சொற்களாம். அவை அன்னள்
- இன்னள் - அன்னாள், இன்னாள் எனவரும்.
 

அவை முதலாகிய 'அள்ளும்  ஆளும்'  என்னாது  பெண்டன்  கிளவி
எனக்   கூறினார்.   அவ்வாட்டி   இவ்வாட்டி   எனவரும்  இகர ஈற்றுப்
பெயர்களும், அப்பெண்டு இப்பெண்டு எனவரும் உகர ஈற்றுப் பெயர்களும்
முறைமை கருதாது  வரும் அன்னை  எனவரும் ஐகார  ஈற்றுப்  பெயரும்
கோடற்கென்க. (பெண்டன் கிளவி - பெண்தன்மை உடைய கிளவி - தன் -
தன்மை)  உரையாசிரியன்மார்  பெண்டென்  கிளவி எனப்பாடங் கொண்டு
அப்பெண்டு,  இப்பெண்டு,  உப்பெண்டு  என  உதாரணம் காட்டுவர். அது
பொருந்தாதெனக் கருதிய சேனாவரையர் வழக்கிறந்தது எனக் கூறுவர்.
 

ஒப்பொடுவரூஉம்   கிளவி  என்பது ; உவம  உருபிடைச்  சொற்களை
முதனிலையாகக்  கொண்டு   வரும்   பெயர்களாம்.  அவை  அன்னவன்,
அன்னவள், அன்னவர், அனையவன், அனையவள், அனையவர் எனவரும்.
 

ஒப்பிடைச்   சொல்லான்  வரும்  என்னாது  ஒப்பொடுவரூஉம்  எனப்
பொதுப்பட  ஓதியமையான் புலியான், வேங்கையான், பூசையான், மயிலாள்,
குயிலாள், கண்ணார், பொன்னார், கோதையார், கூற்றத்தார் என ஒப்புமைக்
கருத்தான்  வருவனவும்   கொள்க.   இனி,   இதற்குப்  பொன்னன்னான்,
பொன்னன்னாள்  எனத்  தொடர்மொழிகளைக்  காட்டுவது  நேரிதாகாமை
அறிக.
 

மேலைச்  சூத்திரத்துக்கூறிய பதினைந்தும்  ஒருமொழியாய்த்  திரிபின்றி
உயர்திணை முப்பாலையும்  பற்றிப்  பெரு  வழக்கிற்றாய் வருவன. இங்குக்
கூறிய பதினைந்தும்   அவ்வாறன்றித்  தொகைச்  சொல்லாயும்.  வழக்குப்
பயிற்சிக்  குறைந்தவையாயும்  வருதலின்  அவற்றொடு  கூறாமற் பிரித்துக்
கூறினார் என்க.
 

சூ. 165 :

எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை யடுத்த மகனென் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்

[10]
 

க-து :

இதுவுமது.
 

உரை : எல்லாரும் என்னும் படர்க்கைப்  பெயரும் எல்லீரும் என்னும்
முன்னிலைப் பெயரும் பெண்ணென்னும் சொல்லைத்