சூ. 146:மற்றையவர்கள்   என்ற    சொல்    வழாநிலை   என்பதை
விளக்கப்பெரிதும்  முயலும்  உரைகாரர்  கள்ளீறு   அஃறிணைக்  கல்லது
வாராது  என்று   கூறி  நமர்கள்  என்பதனை  வழூஉச்  சொல்   எனல்
பொருந்துவதாக   இல்லை.    நமர்காள்-நமரங்காள்   போல்வனவற்றிற்கு
இவர் கூறியது ஒக்கும்.
 

சூ. 164:அன்னன் அன்னான் என்பன ஒப்பொடு வரூஉம் கிளவிஆகா.
ஒப்பொடுவரின் அன்னவன் இன்னவன் என்றே வரல்வேண்டும் என்பதனை
விரிவாக  விளக்கிய   இவ்வுரைகாரர்   (பக்-188)   ஒப்புப்பற்றி   வருவன
பொன்னன்னார்  உயிரன்னன்   என  உவமவாய்பாட்டால்  வரும்  என்று
வரைந்துள்ளமை ஆராய்தற்குரியது. (பக்-231)
 

சூ. 166:பல்லோர்க்குறித்த  சினைநிலைப்பெயர்   செவியர்,  தலையர்,
வாயர் எனவரும் என்கின்றார். பெருங்காலர், பெருந்தோளர் கூனர் குருடர்
முடவர் என  ஏனையோர் குறிப்பிடவும் இவர் பண்பு அடாதசினைப்பெயர்
கூறுவது உலகில் வழங்கும் மரபுக்கு ஒத்ததாகத் தோன்றவில்லை.22
 

சூ. 169:பல்ல பல சில  உள்ள  இல்ல  என  ஆசிரியர் சொல் பற்றி
ஓதவும்  இவர்  பல்லவை, சில்லவை, உள்ளவை என்பனவற்றைச் சேர்த்துக்
கொண்டதன் காரணம் புலப்படுத்தப் படவில்லை.
 

சூ. 194:நகைக்கும்  என்ற  சொல்லாட்சி  பிற்பட்டது.  நகுதல் சமாதி
என்ற  அணிவகையால்  நகுமுல்லை.  நகுவன போல்வனமுல்லை, முல்லை
முறுவலிக்கும் என்பன போல வருதலைக் காண்கிறோம். சமைக்கும் என்பது
உணவு  என்னும்  சார்பினால்  உயர்திணையைச்  சுட்டுகின்றது.   சாத்தன்
பிளிறும்,  சாத்திகுரைக்கும் என்றாற்போல்வன  அஃறிணை  வினையாகும்.
யாழ்எழூஉதலும்  சாந்தரைத்தலும்  அன்னமரபின்  வினையாதற்கண் தடை
யாது என்பது விளக்கப்படவில்லை.23
 

சூ. 192.ஒருவர்  என்ற சொல் ஒருவுவர் என்ற பொருள்தருமா? ஒருவ,
ஒருவர், ஒருவி, ஒருவூஉ என


22. விரவுமலர்  பொறித்த  தோளர்  (நற்-144) இரும்பார்க்கும் காலராய்
[நாலடி-122] என்றாற்போல வரலாம்.
 

23. யாழ் என்னும்  சார்பானும்-சுண்ணச் சாந்து எருதுகளான் அரைக்கப்
பெறுதலானும்  அவை   அன்ன  மரபின்  வினையாகா  என்பது  கருத்து.
சிரிப்பும்-பாகம் (சமையல்) செய்தலும்  உயர்திணைக்கே  உரியவை என்பது
எனது கருத்து.