190பெயரியல்

தொடர்ந்து  நிற்கும்   மகன்  என்னும்  சொல்லாகிய பெண்மகன் என்னும்
சொல்லும்  மேலன  போலப்  பால்  விளங்கவரும்  உயர்திணைப் பெயர்ச்
சொற்களாம் என்று கூறுவர் புலவர்.
 

எல்லார்,  எல்லீர், என்பவை  உம்மை  பெற்று  நிற்றலானும் மகன்என
ஈறுதிரிந்து நிற்றலானும் இவற்றை வேறாகக் கூறினார்.
 

சூ. 166 :

நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரொடு
அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே

[11]
 

க-து :

இதுவுமது.
 

உரைநிலப்பெயர்  முதலாக   எண்ணியற்பெயர்   ஈறாக    ஓதிய
அவ்வனைத்துப்  பெயர்களும்  மேலன  போலப் பாலறிவந்த உயர்திணைப்
பெயர்ச்  சொற்களாகும்.   இயல்பினவே  என்னும்  ஏகாரம்   இசைநிறை.
ஏனையஎண்ணுப் பொருளன.
 

நிலப்பெயராவன :  முல்லை  முதலாய  நிலமும்,  நாடும், ஊரும் பற்றி
வருவன.   அவை,  முல்லையான்,   குறிஞ்சியான்,   நாட்டான்,  ஊரான்,
மதுரையான்  எனவரும்.  வஞ்சிநாடன் என அவை அடையடுத்தும் வரும்.
அன், ஆன், அள், ஆள், அர், ஆர் என்னும் இறுதிகளை ஏற்பனவற்றொடு
பொருந்தக் கூட்டிக் கொள்க.
 

குடிப்பெயராவன :  குடிமரபு  பற்றி  வரும்  பெயர்.  அவை   சேரன்,
சோழன், சேரமான், மலையமான் எனவும் பாணன், கடம்பன் எனவும்வரும்.
இவைபற்றி  வரும்   பெண்பாற்   பெயர்  சோழச்சி,  சேரச்சி,  பாணத்தி,
கடம்பச்சி  என்றாற்  போல   வரும். ஒன்றென  முடித்தலான் பார்ப்பான்,
பார்ப்பனி,    வேளாளன்,    சோழியன்    என   வருவனவும்  கொள்க.
பெண்பாற்கும், பலர்பாற்கும் ஏற்ற பெற்றி கொள்க.
 

குழுவின்   பெயராவன :-   யாதானும்    ஒரு   துறைக்கண்    ஒத்த
உரிமையுடையோராய்ப்   பலர்  கூடியுறையும்  கூட்டத்தைக்  குறித்துவரும்
பெயர், அவை : அவையத்தார், மன்றத்தார்,