உரை:தாம் என்னும் பொதுப்பெயர் இருதிணைக்கண்ணும் பன்மைப்பாலுக்கு உரித்தாய் வரும். |
எ-டு :தாம் வந்தார், தாம் வந்தன எனவும் தாம்பலர் - தாம் பல எனவும் வரும். |
சூ. 186 : | தானென் கிளவி ஒருமைக் குரித்தே |
(31) |
க-து : | தானென்னும் பொதுப்பெயர் இருதிணைக்கண்ணும் வருமாறு கூறுகின்றது. |
|
உரை: தான் என்னும் பொதுப்பெயர் இருதிணைக்கண்ணும் ஒருமைப்பாலுக்கு உரித்தாய் வரும். |
எ-டு : தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது எனவும் தான் ஒருவன், தான் ஒருத்தி, தான் ஒன்று எனவும் வரும். |
சூ. 187 : | எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி |
| பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே |
[32] |
க-து : | எல்லாம் என்னும் பொதுப்பெயர் இருதிணைக்கண்ணும் வருமாறு கூறுகின்றது. |
|
உரை : எல்லாம் என்னும் பெயர்நிலைமையாகிய பொதுச்சொல் பன்மைப் பாலைக்கருதிய நிலைமைத்தாகும். |
இப்பொதுப்பெயர் உயர்திணைக்கண் வருங்கால் தன்மைப்பன்மைக் கண்ணும் அஃறிணைக்கண் வருங்கால் படர்க்கைப்பன்மைக் கண்ணும், முன்னிலைப்பன்மைக் கண்ணும் வருதலின் பன்மை என்னாது "பல்வழி" என வாய்பாடு வேறுபடுத்திக் கூறினார் என்க. |
எ-டு : எல்லாம் வந்தேம் எனவும் எல்லாம் வந்தன-எல்லாம் வந்தீர், எனவும் வரும், எல்லாம் யாம்-எல்லாம் அவை, எல்லாம் நீயிர் எனவும் வரும். |
எல்லாம் என்னும் சொல் தலையெல்லாம் நொந்தது. மேனி எல்லாம் பசந்தது என எஞ்சாப் பொருட்டாய் வருமிடத்து அஃது உரிச்சொல் நிலைமை எய்துதலின் "பெயர்நிலைக் கிளவி" என்றார். எல்லாம் என்னும் உரிச்சொல்வேறு-எல்லாம் என்னும் பெயர்வேறு. உரிச்சொல்லாயவழி ஒருமை வினையான் முடியும்-பெயராயவழி பன்மையான் முடியும் என அறிக. |