சூ. 208:பாடன்மார்  எமரே - காணன்மார்  எமரே.  இவை  மாரீற்று
வினைமுற்றுக்கள்  அல்ல.  பாடுவார் -  காண்பார் எனவரும் வியங்கோள்
முற்றின்  எதிர்மறையாகிப் பாடுவாரல்லர் ஆகுக, காண்பாரல்லராகுக என்று
பொருள்படும்   வியங்கோள்   முற்றே   என்றும்  வியங்கோள்  ஆண்டு
ஏவற்பொருளில் வந்துள்ளது  என்பதுமே சேனாவரையர் கருத்து. இச்செய்தி
கணேசையர் வரைந்துள்ள குறிப்புரையானும் தெளிவுறும் (பக். 227)29
 

சூ. 221:உண்டு  என்பது  பொதுவினை  என்பது உரையாளர் கருத்து.
உண்டு பொதுவினையாயின் "முன்னிலை வியங்கோள்" என்னும் நூற்பாவில்
"இன்மை செப்பல் வேறு" என்பனவற்றொடு  இணைத்துக் கூறப்பெறாததன்
காரணம் என்ன?30
 

சூ. 223:வியங்கோள்  என்ற  சொற்கு  ஏவுதல் என்பது பொருளன்று,
வெளிப்படுத்தற்  கொள்கையை  உடையது  என்பதே  பொருள்  என்றார்.
(பக்-240)  ஏவல்  வியங்கொண்டு  -  செலவியங்  கொண்மோ  -  வியங்
கொண்டான்  என்பவை  அவர்காட்டும்  எடுத்துக்காட்டுக்கள். இவை ஏவல்
என்ற பொருளிலேயே வந்துள்ளமைக்கும் எடுத்துக்காட்டாகின்றன.31
 

சூ. 228:நிகழுங்காலத்துச்  செய்யுமென்   கிளவி   எனவே  செய்யும்
என்னும்  முற்றின்  காலங்  கூறியவாறு  (பக்-248)  உம் என்னும் ஈற்றான்
நிகழ்காலம்  உணர்த்தி  வரும்  முற்று   வினையாயும்  (பக்-241)   என்று
குறிப்பிடும்   உரைகாரர்  செய்யும்  என்னும்  முற்று   எதிர்காலத்துக்கும்
உரித்தாகலின் (பக்-198) என்று கூறுதலின் பொருத்தம் ஆராய்தற்குரியது.32
 

சூ. 214.பொன்னன்  என வந்த குறிப்பு வினையும் வினையாலணையும்
பெயராகிப்    பொன்னனை  அழைக்க   எனவரும்.   அவ்வழி   அஃது
எடுத்தலோசையாற்  கூறப்படும்  (பக்-232) உண்ணாய் தின்னாய் எனவரும்
முன்னிலை வினைகளே ஈறு குன்றி உண், தின் என முதனிலையாக நின்று


29. புறநானூற்றுப்   பழையவுரை   மறைந்து    விட்டது.    நற்றிணை
உரையாசிரியர்   மார்   ஈற்றினை   வியங்கோள்  வினை   முற்றீறாகவே
விளக்குகின்றார்.
 

30. உரையிற் கோடல் என்னும் உத்தியாற் கொள்ளப்பட்டது.
 

31. எண்ணத்தை வெளிப்படுத்தல் என்பது சொற்பொருள் ஏவுதல் அதன்
சார்பாகவந்த கருத்துப் பொருள் என்பதே ஈண்டு விளக்கப்பட்டது.
 

32. முதலுரிமை  நிகழ்காலம்  அடுத்த   உரிமை  எதிர்காலம்  என்பது
சூத்திர அமைப்பான் கருதப்பட்டது.