214பெயரியல்

சூ. 196 :

ஆஓ வாகும் பெயருமார் உளவே

ஆயிடன் அறிதல் செய்யு ளுள்ளே

(41)
 

க-து :

ஒருசார்   பெயர்ச்சொற்கள்     செய்யுட்கண்   ஈறுதிரிந்துவரும்
என்கின்றது.
 

உரை : ஆன், ஆள், ஆர், ஆய் என்னும் ஈறுகளுள் நிற்கும் ஆகாரம்
ஓகாரமாக  மாறிவரப்பெறும்   பெயர்ச்சொற்களும் உள.  அவை அவ்வாறு
வருமிடம் செய்யுள் வழக்கினுள் என அறிக.
 

என்றது ; மூவகைப்  பெயர்களையும் ஓதுமிடத்து அவன், அவள், அவர்
எனவும் சுட்டு முதலாகிய அன்னும்  ஆனும் எனவும் கூறியதனான். அவை
செய்யுட்கண்       திரிந்தும்    வரும்      என்பதும்        அத்திரிபு
பொருட்டிரிபாகாதென்பதும்   கூறியவாறாம். "ஆகும்  பெயரும்  உளவே"
என்றதனான்   ஆகாமல் வருவனவும்  உள என்பது பெறப்படும். செய்யுள்
என்றது செய்யுள் வழக்கினை.
 

எ-டு : வில்லோன்  காலன  கழலே  தொடியோள் மெல்லடி மேலவும்
சிலம்பே நல்லோர்  (குறுந்-7) எனவும்  பருவரல்  செப்பாதோயே  (நற்-70)
எனவும் வரும்.
 

'ஆய்' வினையாலணையும் பெயர்க்கண் ஈறாகி நிற்கும் என்க. சேரமான்,
மலையமான்,    பெருமாள்,   கருமார்,  கன்னார்  என்பவை   திரியாதன.
அழாஅன்-புழாஅன்    என்பனவும்   திரியாவாம்.   ஆயிடன்   அறிதல்
என்றதனான்   சிறுபான்மை    கிழவன்,   கிழவள்,  பெரியர்    என்னும்
தொடக்கத்தன அகரம்   ஓகாரமாய்க்  கிழவோன்,  கிழவோள், பெரியோர்
எனவருதலும், இன்னும் இதனானே அவை கிழவோய் என முன்னிலைக்கண்
வருதலும் கொள்க.
 

சூ. 197 :

இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுட் கிளக்கும்

இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா

நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான

[42]
 

க-து :

இருதிணைச்  சொற்கும் ஓரன்ன உரிமையவாய்  வருவன விரவுப்
பெயர்களெனவும்  அவைதத்தம்   மரபின்   வினையொடு வந்து
திணையும் பாலும் விளக்குமெனவும் ஓரோவிடத்து அன்னமரபின்
தொழில்பற்றி  வரும் பொதுவினையாகிய    செய்யும்   என்னும்
முற்றும் திணைவிளக்கும் எனவும் கூறினமையின்  தத்தம் மரபின்
வினையின்றிப்  பொது      வினையான்    வருமிடத்தெல்லாம்.
இயற்பெயர்கள்  பொதுவாக நிற்கும்  என்றதற்குப் புறனடையாகச்
செய்யுளுள் பொதுவினை  பெற்று  நிற்பினும் இறைச்சிப் பொருள்
பயத்தற்  பொருட்டு   உயர்திணைப்  பண்புகள்   ஏற்றிக் கூறப்
பெற்றிருப்பினும் ஐவகை  நிலைத்துக்  கருப்பொருள் மேல் வரும்
இயற்பெயர்கள்   திணையொடு   பழகிய    பெயரல்லாதவிடத்து
அஃறிணையையே  சுட்டி  வரும் என அஃறிணை   இயற்பெயர்
பற்றியதொரு இயல்பு கூறுகின்றது.