பெயரியல்215

உரை :இறைச்சிப்  பொருள் பயக்குமிடத்துச்  செய்யுளுட் கூறப்பெறும்
விரவுப்  பெயராய   இயற்பெயர்கள்,  திணை   உணர்தற்குத்  துணையாக
அவ்வந்நிலப்பொருள்மேற் றோன்றி  வருதலான்  அவை  உயர்திணையைச்
சுட்டமாட்டா. அஃறிணையையே சுட்டி நிற்கும்.
 

சாத்தன்  சாத்தி  என்றாற்போல  வரும் - முதற் பெயரும், அஃறிணை,
இயற்பெயரும்  அடங்க  இயற்பெயர்க்கிளவி  எனப்  பொதுப்பட ஓதினார்.
உறுப்பு  முதலிய  சார்புகளான்  வெளிப்பட  நிற்பின் அவை அஃறிணைப்
பெயர்  என்பது தாமே  புலப்படுமாதலின் விரவுப்  பெயர் எனற்கு ஏற்பப்
பொதுப்பட நிற்பனவற்றிற்கே இவ்வதி இயையுமென அறிக.
 

அகப்பொருட்   செய்யுட்களை  வரைந்து  சுட்டுவதற்காக  "இறைச்சிப்
பொருள்வயின் செய்யுள்" என்றார். "இறைச்சி  தானே  உரிப்புறத் ததுவே"
(பொருளியல்  -  23)  "இறைச்சியுட்   பிறக்கும்  பொருளுமா   ருளவே"
(பொருளியல் - 35)  "அன்புறு  தகுந இறைச்சியுட் சுட்டலும்" (பொருளியல்
-36) என, ஓதுவனவற்றான் இறைச்சியின் இயல்பு அறிந்து உணர்க.
 

இறைச்சி  என்பது உள்ளுறையின் வகையேயாதலின் உள்ளுறை உவமம்
பற்றிக் கருப்பொருளாக  வரும்  இயற்பெயரும்  கொள்க.  எ-டு : "கடுவன்
முதுமகன்  கல்லா  மூலற்கு   வதுவையயர்ந்த  வண்பறழ்க் குமரி" எனவும்
"மாதர் வண்டின்  நயவருந்தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
(நற் - 244)  எனவும்  கல்லாக்கடுவன் கணமலி சுற்றத்து  மெல்விரல் மந்தி
குறை கூறும்  செம்மற்றே (குறிஞ்சிக்கலி-4) எனவும் கொடியை வாழி தும்பி
இந்நோய்  படுகதில்லம்ம  (நற்றி - 277)   எனவும்   கொடுவரி   வென்ற
வருத்தமொடு   நெடுவரை மருங்கின்  துஞ்சும் யானை (குறிஞ்சிக்கலி - 13)
எனவும் வரும்.
 

கடுவன்,   முதுமகன்,   மூலன்   எனவும்;  மாதர்   வண்டு  எனவும்;
கல்லாக்கடுவன்,   மந்தி  குறைகூறும், எனவும்;  கொடியைதும்பி  எனவும்;
வருத்தமொடு துஞ்சும்யானை எனவும் உயர்திணைப் பண்புகளை ஏற்றிக்கூறி
இறைச்சியும்  உள்ளுறையும்  பெறப்பட   வைத்துள்ளமை  கண்டு கொள்க.
இவை  பொதுப்  பெயர்களாயினும்  அஃறிணையையே சுட்டி  நின்றவாறும்
கண்டு கொள்க.
 

சூ. 198 :

திணையொடு பழகிய பெயரலங் கடையே
[43]
 

க-து:

மேலைச் சூத்திரத்திற்கொரு புறனடை கூறுகின்றது.