218வினையியல்

சூ. 199 :

வினை எனப் படுவது வேற்றுமை கொள்ளாது

நினையுங் காலைக் காலமொடு தோன்றும்

(1)
 

க-து :

எல்லா   வினைச்சொற்கும்      உரிய      பொதுவிலக்கணங்
கூறுகின்றது.
 

உரை:வினைச்சொல்  என்று   கூறப்படுவது  வேற்றுமை கொள்ளாது,
ஆராயுங்காலத்துக்   காலத்தொடு  விளங்கி   நிற்கும்.   வேற்றுமையாவது
வேற்றுமையியலுள்  கூறிய   எண்வகை  வேற்றுமை நிலைகள். வேற்றுமை
கொள்ளாது என்றதனான் உருபேலாமை தாமே பெறப்படும்.
 

வினையாலணையும் பெயரை நீக்குதற்கு வேற்றுமை  கொள்ளாதென்றும்
இடைச்சொல்  உரிச்சொற்களை நீக்குதற்குக் காலமொடு தோன்றும் என்றும்
கூறினார்.  குறிப்பு  வினைக்கண்ணும்  எதிர்மறை வினைக்கண்ணும் காலம்
தெற்றெனப் புலப்படாமையின் 'நினையுங்காலை' என்றார்.
 

எ-டு : உண்டான், உண்டது  எனவும், கரியன்,  கரியது எனவும் வரும்.
உண்ணான்,    உண்ணாது   என  எதிர்மறை    வினைவரும்.   ஏனைப்
பாலிடங்களிலும் ஒட்டிக்கொள்க.
 

சூ. 200 :

காலந் தாமே மூன்றென மொழிப
(2)
 

க-து :

மேற்கூறிய காலத்தின் தொகை கூறுகின்றது.
 

உரை:காலமொடு    தோன்றும்   எனப்பெற்ற   அக்காலம்  மூன்று
கூறுபடுமெனக் கூறுவர் தொன்னூலாசிரியர். தாமே என்பது அடிநிரப்பவந்த
அசைச்சொல். காலமாவது  'பொருள்   நிகழ்வு   உரைப்பது'   (செய்-194)
என்பாராகலின் இச்சூத்திரம், மொழிவாம் என்னும் உத்திக்கு இனம்.
 

காலம் என்னும் சொற்குப் பொருள், இடையறாது செல்வது என்பதாகும்.
கலித்தலைச்  செய்வது   காலம்.   இஃது கால்  எனவும்   காலை எனவும்
வழங்கும்.
 

சூ. 201 :

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா

அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும்

மெய்ந்நிலை உடைய தோன்ற லாறே

(3)
 

க-து:

மேற்கூறிய    காலங்களின்    பெயரும்    அவை    வினைச்
சொற்களிடத்துத் தோன்றும் முறைமையும் கூறுகின்றது.
 

உரை :  இறப்பின்   கண்ணும்,   நிகழ்வின்   கண்ணும்,   எதிர்வின்
கண்ணும்வரும் அம்மூன்று காலமும் வினைச் சொற்களுள்