எடுத்தலோசையான் ஏவற்பொருள் உணர்த்தும் (பக்-240) வினைக்கே உரிய
எடுத்தலோசையைப் பெயருக்கும் கொண்டமை மயக்கந் தருவதாகும்.33
 

சூ. 229:ஒரு சாரார் "செய்யா" என்பதனைத்  தனி ஒரு வாய்பாடாகக்
கருதினர்.  அது  பொருந்தாது  என்பதனை  நிகழூஉ  நின்ற  பலர் வரை
கிளவியின்  என்பதனான்  அறியலாம்.  இத்தொடர்களின்  பொருள் நன்கு
புலப்பட்டிலது.34
 

வினை   எச்சத்தை   ஈறு   கெட்டு   நிற்கும்  தொழிற்பெயர்  எனல்
திரிபுணர்ச்சியாம்.  (பக்-250)  வரல் வேண்டும்  என்பதனை வர வேண்டும்
என  வழங்குதல்  பிழைபட்ட வழக்கு. (பக்.271) எனல்  என்பதன் அடியாக
என என்னும்   செயவெனெச்சம்  பிறக்கும்.  (பக்-284)   இத்தொடர்களின்
பொருத்தம் ஆராய்தற்குரியது.
 

சூ. 243:மிக்கது  என்பதற்கு  ஒன்றன்கண்  சிறப்புடையதாக  நிகழும்
பாங்கினை  உடைய வினைச்சொற்களாகிய  ஈதல்,  ஓதல், கற்றல், ஆற்றல்,
ஒழுகுதல் முதலிய  தொழிற்   சொற்கள்   என்று   பொருள்   செய்ததன்
பொருத்தம்  புலப்படவில்லை.  (பக்-269)  ஆசிரியர்  இங்ஙனம் அகப்படச்
சூத்திரம் இயற்றுவாரா என்ற ஐயம் ஏற்படுகின்றது.35
 

சூ. 271:ஒருவரைக்  கூறும்  பன்மைக்  கிளவியும்  ஒன்றனைக் கூறும்
பன்மைக்  கிளவியும்  ஆர்  ஈறுபெற்றே  அமைதல்  வேண்டும்  என்பது
இந்நூற்பாவாலேயே      பெறப்படுகின்றது.     இயற்பெயர்      என்பது
இடுபெயர்களுக்கும்   அஃறிணைப்  பெயர்களுக்கும்   பொதுவான  சொல்
ஆதலின்  அஃறிணை இயற்பெயரும்,  இடுபெயர்களும்  பன்மைக்  கிளவி
ஆதற்கண் ஆர்  என்னும்  இடைச்சொல்பெறும்  என்பது  இந்நூற்பாவின்
பயனாகும்.36 


33. எடுத்தலோசை  குறிப்பு  வினையை  நோக்கியே   கூறப்படுதலின்
மயக்கம் நேர்தற்கில்லை.
 

34. நிகழூஉ  நின்ற என்றது  நிகழாநின்ற என்பதன் மாற்று வடிவமாகக்
கூறப்படுதலின்   செய்யூ  என்னும்  வினையெச்ச   வாய்பாட்டின்  மாற்று
வடிவமே 'செய்யா' என்பது என உணர்தல் வேண்டும் என்பது பொருள்.
 

35. இந்நூற்பாவிற்கு   ஒல்லும்  வகையான்   உரை   வரையப்பட்டது.
இதனினும் செம்பொருள் தோன்றின் ஏற்றுக் கொள்ளலாம்.
 

36. உயர்திணைப்பெயர்-விரவுப்பெயர்களின்    ஒருமையீறு   கெடாமல்
அதன்  மேல்  உயர்வுகருதிவரும்  ஓர்   இடைச்சொல்  என்பதே  எனது
கருத்து.