சூ. 343:"எய்த்துநீர்ச்  சிலம்பின்  குரல்   மேகலை"  என்ற  இடத்து
எய்த்தல்  அறிதல் என்னும்  பொருளில்  வந்துள்ளதாக நச்சினார்க்கினியர்
குறிப்பிட்டுள்ளதை    ஏலாமையின்    காரணம்   குறிப்பிடப்பட்டிருத்தல்
வேண்டும்.
 

சூ. 403:சிதைதல்  வேறு - திரிதல் வேறு. வடமொழிச் சிறப்பொலிகள்
தமிமொழிக்கேற்பத்  திரிந்து  வருதலே மரபு;  சிதைந்து வருதல் மரபன்று.
விபீஷணன் -  வீடணன்  எனவும்  லஷ்மணன்  -  இலக்குவன்  எனவும்
வருவனவும்  திரிபே  ஒழியச்  சிதைவல்ல.  எனவே சமற்கிருதச் சொற்கள்
தமிழில் அதன்  ஒலிக்கேற்பத்திரிந்து  வருதலை "வடசொற் கிளவி" என்ற
நூற்பாவும்,  சமற்கிருதச்  சிதைவாகிய  பாகதத்திலிருந்து தமிழில் திரிந்தும்
திரியாது வருவனவற்றைச்  'சிதைந்தன' என்ற  நூற்பாவும் குறிப்பிடுகின்றன
என்று கொள்வதே பொருத்தம் என்று தோன்றுகின்றது.37
 

சூ. 404:ஓதிமுது  போத்து  என்பதன்கண் ஓந்தி என்பதனை ஓதி என
இடைக்கண்  குறைத்தலும் நீலமுண்  துகிலிகை என்பதனை நீலுண்துகிலிகை
எனக்  கடைக்குறைத்தலும்  இச்செய்யுள் விகாரத்தின் பாற்படுத்துக் கொள்க
(பக்-351)  ஓந்தி-ஓதி.  நீலம்-நீல் என  வருதல்  குறுக்கும்  வழிக்குறுக்கும்
செய்யுள் விகாரம்  அன்று.  இவற்றைக்  குறைக்குமிடம்  அறிந்து குறைக்க
(பக்-411)   இவ்விரு   தொடர்களினிடையே    சிறிது   பொருத்தமின்மை
தோன்றுகிறது. தாமரை-மரை என்ற இரு வழக்கும் ஓந்தி - ஓதி என்ற இரு
வழக்கும்   நீலம்-நீல் என்ற  இரு   வழக்கும்  உள்ளன.  எம்பின்-எம்பி;
தம்பின்-தம்பி; கரும்புல்-கரும்பு  என்ற இருவழக்கும் இல்லை. எம்பி-தம்பி-
கரும்பு என்ற ஒரு வழக்கே உள்ளது. இவற்றை ஏனையவற்றோடு சேர்த்துக்
கூறுதல் பொருந்துமா (பக். 411)38
 

சூ. 409:யானஞ்சுவலே  என்ற  தொடர்  நீ  வரலாறு  என்பதனொடு
இணைந்து  பொருள் தருவதே பொருட்  சிறப்புடையதாகும். வெற்ப வாரல்
என்பது  வியன்மலையாறே  என்பதனொடு  இணைதலே  சிறப்பு. இரண்டு
பாடல்களிலும் 


37. பாகதம் என்பது செம்மையுறாத பழந்தமிழ் என்பது எனது கருத்து.
 

38. சொல்லமைப்பாய்வு   நோக்கில்  எம்பி  நும்பி  தம்பி  என்பவை
ஈறுகுறைந்தவை   என  இயைபுபற்றி   எடுத்துக்   காட்டப்பெற்றன.  ஓதி
முதலியவை  நேரே  குறுக்கும்  வழிகுறுக்கல்  என்னும்  விதிபெறா-அதன்
பாற்படும் என்றே சுட்டினாம்.