முதல் இரண்டடிகள் வரும் வழிக்கு அடைமொழியாக அமைதல் காண்க. |
சூ. 413:நிலங்கடந்தான் முதலியன உருபு தொகையாக வரும் தொடர்மொழிகளாகலாம். கடிசூத்திரப்பொன் என்பது தாலிப்பொன் என்றாற்போல வரும் தொகைச்சொல் அன்றோ? (பக்-367). |
சூ. 414:புலிப்பாய்த்துள் அஞ்சத்தக்கது. அவன் செலவு புலிப்பாய்த்துள். மழை வண்கை புகழ்தரும் பாரியின் பண்பு மழை வண்கையே என இவற்றைத் தொகை மொழிகளாகக் கொள்வதன்கண் தவறு என்ன? (பக். 369).39 |
சூ. 419:"வேற்றுமை தொகையே வேற்றுமையில" முதலிய நூற்பாக்களால் தொகைகளின் இலக்கணமே கூறப்பட்டது. மொழிகள் எவ்வாறு பிரிந்து பொருளுணர்த்தும் என்பது ஆசிரியர் நோக்கமன்று. (பக். 370) என்றார். விரிந்து பொருளுணர்த்துமாற்றை அறியாமல் தொகைகளுள் பொருள் சிறந்து நிற்குமிடங்களை அறிதல் யாங்ஙனம் இயலும்.40 |
சூ. 415:மாதவி ஆடரங்கிற்கு வந்தாள். மாதவியை ஆடரங்கிற்காண்க, மாதவி ஆடரங்கிற்குச் செல்வாள் என்புழி வந்தாள், காண்க - செல்வாள் என்ற வினைமுற்றுக்களே ஆடரங்கு என்ற வினைத்தொகையில் காலத்தை வெளிப்படுக்கின்றன. நெருநல் அடுகளிறு போன்றவற்றில் காணப்படும் குறை இவ் எடுத்துக்காட்டுக்களிலும் காணப்படுதல் அறிக. (பக். 372)41 |
சூ. 417:'உம்மை இடைச்சொல் தொகையொடு முடிதலானும்' என்றார். உம்மைத்தொகையொடு முடிதல் வேண்டும் என்ற வரையறை இன்மை 288ஆம் நூற்பாவான் உணரப்படும்.42 |
|
39. 413, 414 தொகைமொழி - தொகைநிலைத் தொடர் இவை பொருள்கொள்ளும் கோணத்திற்கு ஏற்பத் தடுமாறி வரும். |
40. விரித்துப்பொருள் காணல் தொகையமைப்பினை அறிந்து கொள்ளவே என்பது அவ்விளக்கத்தின் கருத்தாகும். |
41. ஒரு காலத்தை, வரைந்துணர்தலை விளக்குதற்குத் தந்த எடுத்துக்காட்டுக்கள் மாதவி வந்தாள் முதலியவை. நெருநல் அடுகளிறு முதலியவை அக்கோணத்திற் காட்டப்பட்டவை அல்ல என்பது எனது கருத்து. |
42. எண்ணும்மையை வரைந்து சுட்டும் என்பதற்கே இவ்விளக்கம் தரப்பட்டது. உம்மையின் இயல்பு பற்றியதன்று. |