274இடையியல்

சூ. 249 :

ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்
 
[51]
 

க-து:

நிகழ்காலச் சொல்லும் அங்ஙனம் மயங்கும் என்கின்றது.
 

உரை:இறப்பும்   எதிர்வுமேயன்றி   நிகழ்காலமும்  அவ்விரு  காலச்
சொற்களொடு மயங்குதலை நீக்கார் ஆசிரியர்.
 

எ-டு : இவள்  பண்டு  இப்பொழிலகத்து விளையாடும் எனவும், இவன்
நாளை  வரும்  எனவும்   வரும்.   இவை   மேலன   போலப்  பயின்று
வாராமையின்  பிரித்துக்  கூறினார்.  இம்    மயக்கங்கள்   ஏற்புழியல்லது
வாராமையின் சிறப்பத் தோன்றும் என்றும் - மயங்குதல் வரையார் என்றும்
கூறினார்.
 

வினையியல் முற்றியது
  

7. இடையியல்
 

இடைச்சொற்களின்     இயல்புணர்த்துதலின்     இஃது   இடையியல்
எனப்பட்டது. அவற்றின் இயல்புணர்த்துமாற்றான் அவை  வகைப்படுமாறும்
பெறப்பட வைத்து அவற்றுள் ஒரு சாரன இந்நூலகத்து  முன்னும்  பின்னும்
பெறப்படுதலின், அவைதவிர்ந்த மற்றவற்றிற்குரிய சிறப்பிலக்கணமும் அவை
பற்றியமரபும் இவ்வியலின்கண் கூறுகின்றார் ஆசிரியர்.
 

இடைச்சொல்லாவது : பெயர்ப்பொருளையும்    வினைப்பொருளையும்
வேறுபடுத்தும் இயல்பினதாய்  அவற்றின்  வழிமருங்குதோன்றி அவற்றொடு
ஒருங்கு  நடைபெற்றியல்வதாகும்.   அவற்றுள்   ஒரு   சாரன   பெயரும்
வினையுமாகிய   சொற்களினின்று    திரிந்தும்,   சிதைந்தும்,  சுருங்கியும்
இலக்கணக்  குறியீடாக  அமைந்து  இடுங்கிய  சொற்களாக  வருதலானும்,
ஒருசாரன     பெயருமாகாமல்         வினையுமாகாமல்     அவற்றிற்கு
இடைப்பட்டனவாக   வருதலானும்,   ஒருசாரன   திணைபால் இடம் கால
முதலியவற்றைக்காட்டுதற்குரிய உறுப்பாக   இடப்படுதலானும், இடைச்சொல்
என்னும்   காரணக்குறியீடு   பெற்றன.   ஆதலின், இடை, என்னும் சொல்
இடுங்குதல், இடை  நிகர்த்தல்,  இடப்படுதல்  என்பவற்றிற்குப்  பொதுவாக
நின்றது.
 

புணரியல்   நிலையிடைப்     பொருள்நிலைக்  குதவுவனவாய்  வரும்
சாரியைகளுள் பலவும், வேற்றுமையுருபுகளுள்  பலவும் பெயர், வினைகளின்
இடுங்கிய   சொற்களாயும்.    கொன்,   தஞ்சம்   அந்தில்   முதலியவை
பெயர்ப்பொருட்டாயும் வினைப்பொருட்டா