இடையியல்275

யும்,  உவம  உருபிடைச்  சொற்கள்  வினைப்பொருட்டாயும்  ஏ, ஓ, மன்,
தில் முதலியவை பெயர்வினைகட்கு இடைப்பட்டனவாயும் அமையும்.  அம்,
ஆம், அன்,  ஆன்,  முதலிய  ஈற்றிடைச்  சொற்கள்  திணைபால்  இடம்
ஆகியவற்றையும்  - உம்,  க,  உ,  இன்,  முதலிய  ஈற்றிடைச்  சொற்கள்
காலம்,   இடம்,    ஆகியவற்றையும்    த்ட்ற்    முதலிய   இடைநிற்கும்
இடைச்சொற்கள் காலத்தையும் காட்டற்கு இடப்படுவனவாகும்.
 

பெயரையும்,  வினையையும்   இடமாகக்   கொண்டு   தோன்றுதலின்,
இடச்சொல்   என்பதே    இடைச்சொல்   என்பதாயிற்று   என்பார்  ஒரு
சாரார். பெயர்ச்சொல்       வினைச்சொற்களுக்கு      அடிப்படையாகிய
குறைச்சொற்கள்   [நிரம்பா  உரிச்சொற்கள்]  உருவுதிரிந்தும்  திரியாமலும்
நிரம்பிப்  பெயர்-வினைகட்கு  முதனிலையாய்  நிற்குங்கால்  அவையாவும்
உரிச்சொற்களேயாகும்.  அவை   திணைபால்    இடம்காலம்    காட்டும்
இடைச்சொற்களொடு புணர்ந்து முழுமை  பெற்ற  பின்னரே  பெயர்ச்சொல்
என்றும்  வினைச்சொல்   என்றும்  குறியீடு  பெறும்.  இடைச்  சொற்கள்
புணராதநிலையில் முதனிலைச் சொற்களைப்  பெயர்ச்சொல்  வினைச்சொல்
எனக்கூறுதலும் அவற்றை இடமாகக்  கொண்டு  இடைச்சொற்கள்  தோன்றி
வரும் என்பதும் மொழி இயல்புக்கும் இந்நூல் நெறிக்கும் பொருந்தா என்க.
அதனானன்றே   ஆசிரியர்  பெயரினும்  வினையினும்   நடைபெற்றியலும்
என்னாது  "பெயரொடும்    வினையொடும்     நடைபெற்றியலும்"   என
உடனிகழ்வதாக ஓதுவாராயினார் என்க.
 

சூ. 250 :

இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும்

நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே 

 
(1)
 

க-து :

இடைச்சொற்களின் பொதுவியல்பாமாறு கூறுகின்றது.
 

உரை:இடைச்சொல் என்று கூறப்படுபவை பெயரொடும் வினையொடும்
வழங்குதலைப் பெற்றியலும், அவைதாமாக நடக்கும் இயல்பில்லாதன.
 

பால் முதலியவற்றைக் காட்டும் இடைச்சொற்களொடு  கூடாமல்  நிற்கும்
முதனிலைச் சொற்கள் யாவும் உரிச்சொற்களேயாயினும் ஆ, கா, பூ என்றாற்
போலவும் வா,  போ, கா  என்றாற்  போலவும்  வருமிடத்து  வினைமுதற்
பொருள்தரும்   இடைச்சொல்லும்,  ஏவற்பொருள்தரும்   இடைச்சொல்லும்
குன்றிப் பெயராயும்,  வினையாயும்  ஓரெழுத்து   ஒருமொழியாய்   வரும்
சொற்கள் இருவகை  வழக்கினும் நடைபெறுத