276இடையியல்

லானும்,  தத்தம்  பொருளவாய்  வரும்  இடைச்  சொற்களும்  வேற்றுமை
உருபுகளும்,  பெயர்  வினைகளைச்  சார்ந்து  வருதலானும்  பொதுப்படப்
பெயரொடும்  வினையொடும்  என்றார்.   இதனை   ஆசிரியர்  "அவ்வச்
சொல்லிற்  கவையவை  பொருளென  மெய்பெறக் கிளந்த இயல வாயினும்
வினையொடும் பெயரொடும்  நினையத்  தோன்றித்  திரிந்து  வேறுபடினும்
தெரிந்தனர் கொளலே" (இடை-47) எனக் கூறுதலான் அறியலாம்.
 

பெயரொடும்  வினையொடும் நடைபெறுதலாவது அவற்றிற்கு உறுப்பாகி
ஒருங்குஇயலுதலும் அவற்றைச் சார்ந்து இயலுதலுமாம்.  "தமிக்கியல்பிலவே"
என்றது தனித்து நின்றுதம்பொருள் உணர்த்தா என்றவாறாம்.
 

பெயரொடும்   வினையொடும்   என்றது   வழிமொழிதல்.  அஃதாவது
"இடைச்சொற்  கிளவியும்  உரிச்சொற்  கிளவியும்  அவற்றுவழி  மருங்கிற்
றோன்றும்    என்ப"     (பெயரியல்-5)    என்றதனான்    இக்கருத்துப்
பெறப்படுமாயினும்   அவற்றொடு    ஒருங்குவரும்   என்பதும்  ஈற்றினும்
இடையினும் அவற்றிற்கு உறுப்பாக  வருமென்பதும்   பெறப்பட  வைத்தல்
இதன்  பயனாகும்.  அன்றியும்  அச்சூத்திரம்  இடைச்சொல்  பெயரொடும்
உரிச்சொல் வினையொடும் வரும் என நிரனிறையாகப் பொருள் கோடற்கும்
ஏற்பநிற்றலான் அதன் பொருள் புலப்பட  ஈண்டு  விதந்தோதினார்  என்க.
அன்றியும் இடைச் சொற்களின் தலையாய  இலக்கணமாகிய தாமாகநடக்கும்
இயல்பில என்பதற்கும் "பெயரொடும்  வினையொடும்  நடைபெற் றியலும்"
என்பது அவாய் நிலையாக நிற்றலின் இங்ஙனம் கூறுதல் கடப்பாடாதலையும்
அறிக.
 

எ-டு : அதுகொல் தோழி காமநோயே - கொன்னே  கழிந்தன் றிளமை
என இவை பெயரொடும் வினையொடும்   சார்ந்து   வந்தன.   மலையன்,
உண்டான், கரியன் என இவை அவற்றிற்கு   உறுப்பாய்   வந்தன. பிறவும்
அன்ன.
 

சூ. 251 :

அவைதாம்

புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும் 

வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் 

வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் 

அசைநிலைக் கிளவி ஆகி வருநவும் 

இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் 

தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும் 

ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும்என்று 

அப்பண் பினவே நுவலுங் காலை
 

[2]