க-து : | இடைச் சொற்கள் பெயர் வினைகளை அடுத்து வரும் முறைமையும் பிற இயல்புகளும் ஆமாறு கூறுகின்றது. |
|
உரை:மேல் வகைப்படுத்தப் பெற்ற இடைச் சொற்கள் பெயரொடும் வினையொடும் நடைபெறுங்கால் அவற்றின் முன்னர் வருதலும், பின்னர் வருதலும், தம் ஈறுதிரிந்து வருதலும் பிறிதோ ரிடைச்சொல் அவண்வந்து இணைய நிற்றலுமாகிய அத்தகைய இயல்புகளெல்லாம் உறுதற்குரிய, எனக் கூறுவர் ஆசிரியர். |
எ-டு : பண்டுகாடுமன் - கேண்மியா; இவை முன்னடுத்து நின்றன. கொன்னூர் - ஓஒ இனிதே; இவை பின்னடுத்தன. உடனுயிர் போகுகதில்ல - தில் என்பது ஈறுதிரிந்து வந்தது. வருகதில்லம்மஎம் சேரிசேர - பிறிதவண்வந்து இணைந்து நின்றது. |
"அன்னவையெல்லாம்" என்றதனான், மன்னைச் சொல், தில்லைச் சொல் எனத் தம்மை உணரநின்ற வழியும் ஈறுதிரிதலும், னகாரை என எழுத்துச் சாரியை ஈறுதிரிதலும் வேற்றுமை யுருபுகளுள் காவ லோனக் களிறஞ் சும்மே என ஐகாரம் முழுவதும் திரிதலும் பிறவும் கொள்க. |
சூ. 253 : | கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று |
| அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே |
(4) |
க-து: | இவ்வியலுள் உணர்த்தப்படும் மூவகை இடைச் சொற்களுள் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வன பொருளுணர்த்தும் சிறப்பும் அவற்றின் பன்மையும் நோக்கி அவற்றை முதற்கண் உணர்த்தத் தொடங்கி இச்சூத்திரத்தான் 'மன்' என்னும் இடைச்சொல் பெற்று வரும் பொருட் குறிப்பு இவை எனக் கூறுகின்றார். |
|
உரை:'மன்' என்னும் இடைச்சொல், செயற்கழிவும் ஆக்கமும், எச்சமாக ஒழிந்து நிற்கும் பொருண்மையும் என்று சொல்லப்பட்ட அம்மூன்று பொருட் கூறுபாட்டினை உடையதென்று கூறுவர் புலவர். |
எ-டு : சிறியகள் பெறினே எமக்கீயுமன்னே: இது கழிந்த பொருள் சுட்டி நின்றது. பண்டுகாடுமன் (இப்பொழுது வயலாயிற்று) இது ஆக்கங்குறித்து நின்றது. கூரியதோர் வாள்மன் (இப்பொழுது திட்பமின்று) இது ஒழிந்த சொற்பொருண்மை சுட்டி நின்றது. |